பொதுவாக நடராஜர் வழிபாடு வடக்கே இல்லை, அந்த நடராஜ கோலத்தை சிவபெருமான் தமிழகத்தில்தான் காட்டினார், சிதம்பரம் ஆலயம் அதில் தனித்து நின்றது
நடராஜர் கோலத்தை உலகுக்கு கொடுத்த இடம் தமிழகம், அந்த வழிபாடும் தத்துவமும் தமிழகம் கண்ட தனி சிறப்பு
ஆனால் அந்த மாபெரு சிறப்பை உலகறிய செய்யும் வகையில், ஏற்கனவே உலக இயற்பியல் மையத்தில் சுவிட்சர்லாந்தில் வைக்கபட்டிருக்கும் அச்சிலையின் தத்துவத்தை எல்லா மக்களும் அறிய வகை செய்தார் மோடி
சுவிட்சர்லாந்தில் இருப்பது இயற்பியல் ஆய்வில் நடராஜரின் சிலை அணுவின் இயக்கம் அப்படியே ஆகாயத்தின் இயக்கம் , உலகை இயக்கும் தொடர் இயக்கத்தை குறிக்கும் வகையில் நிறுவபட்டுள்ளது
இது விஞ்ஞானம்
-
அதே நடராஜ பெருமான் ஆணவத்தால் ஆடியவனை அடக்கி போட்டு ஆடுகின்றார்,
-
மனிதனுக்கு ஆணவம் கூடாது அரசுகள் ஆணவத்தில் போர் அடாவடி என இறங்க கூடாது,
-
இந்த உலகை இயக்கும் பெரும் பரம்பொருளின் கீழே நாமெல்லாம் தூசு,
-
இங்கு நடப்பதெல்லாம் அவரின் ஆட்டம் நாமெல்லாம் வெறும் பதர்கள் அதனால் உலக அரசுகள் அகங்காரம் கர்வமின்றி நடத்தல் அவசியம்
-
என்பதை போதிக்க ஜி20 மாநாடு அரங்கம் முன் நடராஜர் சிலையினை வைத்தார் மோடி
அந்த உலகளாவிய நிகழ்வு நடந்துமுடிந்த பின் இப்போது உலகெல்லாம் நடராஜ சிலை விவாதபொருளாகின்றது, ஓடி ஓடி விவாதிக்கின்றார்கள்
நடராஜர் சொல்லும் விஞ்ஞான, ஆன்மீக, லவுகீக, பிரபஞ்ச தத்துவமெல்லாம் உலகெல்லாம் விவாதிக்கபடுகின்றன
இங்கே மிகபெரிய வருத்தம் என்னவென்றால் தமிழக இந்துக்களின் மாபெரும் தத்துவவடிவமான நடராஜ பெருமானை உலகறிய செய்த மோடிக்கு எந்த ஆதீனமோ மடமோ வாழ்த்தே சொல்லவில்லை
இது நிச்சயம் வலி பெரும் வலி
மோடி நினைத்திருந்தால் கண்ணனை, ராமனை ஏன் சிவலிங்கத்தையே நிறுவியிருக்கலாம் , குருஷேத்திர தேரை நிறுத்தி கீதையினை காட்டியிருக்கலாம்
மாறாக நடராஜ கோலத்தை நிறுத்தி சிவன் தமிழக தனிபெரும் பக்தியினை உலகறிய செய்தார்
ஆனால் யாரிடமிருந்தும் ஒரு நன்றி அறிவிப்பு இல்லை, மக்களிடம் இல்லை தலைவர்களிடம் இல்லை, ஆதீனங்களிடமும் இல்லை
இந்த நன்றிகெட்டதனத்தை கண்டு, அரசியலுக்காக பம்மும் கயமையினை கண்டு நாணத்தால் நாம் தலைகுனிகின்றோம்
தமிழக இந்துக்கள் தலைகுனிந்து நிற்கும் தருணம் இது, இப்படி ஒரு நன்றிகெட்ட உணர்ச்சியற்ற இனம் உலகில் இருக்குமா என்பது சந்தேகமே
யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, அந்த மோடி எனும் தலைவனுக்கு நாம் நம் நன்றியினை தெரிவித்துகொள்வோம், அந்த நடராஜபெருமான் மென்மேலும் அவருக்கும் அவரால் தேசத்துக்கும் பெரும் நன்மைகளை கொண்டுவரட்டும்
புதிய பாராளுமன்றத்தில் தமிழகத்தின் மடத்திலிருந்து செங்கோல் வாங்கி, ஆதீனங்கள் புடைசூழ அந்த மண்டபத்தில் தேவாரம் பாடி பெரும் அங்கீகாரம் செய்த தலைவனுக்கு ஆதீனங்கள் காட்டும் பதில்மரியாதையினை அந்த சிவனே பார்த்துகொள்ளட்டும்