logo
home தத்துவம் ஜனவரி 24, 2016
உலகில் எவரும் அந்நியரல்ல: சாரதாதேவியார்
article image

நிறம்

இறைவனுக்கும் அவனதுஅடியார்களுக்கும் பணக்காரன் தனது பணத்தின் மூலமும், ஏழை, இறைவனின் திருநாம உச்சரிப்பின் மூலமும் தொண்டு செய்ய வேண்டும். தவறுகள் மனித இயல்பு, அதைப் பெரியதாக எண்ண வேண்டுவதில்லை. அதனை மீண்டும், மீண்டும் நினைப்பதால் துன்பமே ஏற்படுகிறது. ஒரு நாளில் 24 மணிநேரமும் பிரார்த்தனையில் செலவழிக்க முடியாது. பணிபுரிவதில் நிறைய நேரத்தைச் செலவிட்டால், அதுவே மனம் தூய்மையடைய வழி வகுத்து விடுகிறது. இறைவனின் விருப்பத்தாலேயே அனைத்து விஷயங்களும் நடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மனிதன் செயலாற்றினால் தான் இறைவனின் விருப்பம் வெளியாகிறது. இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவான். வாழும் உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மன மகிழ்ச்சியை அளித்தால் உன் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள். நம்பிக்கையும், உறுதியுமே அடிப்படை, இவை இரண்டும் வாழ்க்கையில் இருந்தால் அனைத்தும் இருந்ததற்கு சமமாகும். மனம் அமைதி பெற பிறர் குற்றங்களைக் காத்தீர்கள். உங்கள் குறைகளை எண்ணிப்பாருங்கள். உலகம் முழுவதும் அன்பினால் சொந்தமாக்கிக் கொள்ளுங்குள். உலகில் எவரும் அந்நியரல்ல, உலகம் உங்களுடையது. ஜெபம், தவம் முதலான சாதனைகளில்லாமல் மனம் தூய்மை அடையாது. தூய மனத்தாலன்றி இறைவனை அறியவும் முடியாது.