logo
home தத்துவம் ஜனவரி 24, 2016
விட்டுக்கொடுக்கும் குணமே மனிதனை பாதுகாக்கும்: ஸ்ரீஅன்னை
article image

நிறம்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவாழ்வைப் பெற முயற்சிக்க வேண்டும். இப்படிச் சொல்வது சுலபம். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது கடினம். இந்தக் கடினத்தைச் சுலபமாக்கிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. இறைவனின் தொண்ட„க இருந்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு பணியையும் இறைவனுக்கே அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். படைத்தவன் இருக்கின்றான் என்றதைரியத்துடன், நம் வாழ்க்கைப் பயணத்தை தொடர வேண்டும். ‘கடவுளே! நீ மட்டும் தான் எனக்கு வேண்டும்’ என்று தெய்வத்திடம் உறுதிப்பாட்டுடன் சொன்னால், நீங்கள் எப்போதுமே நேர்மையாக இருப்பதற்கான சூழ்நிலை அமையும். மனம் ஒரு ‘பாலிஷ்’ செய்த நிலைக்கண்ணாடி. அதனை தூய்மையாக வைத்துக் கொள்வதும், அதன் மீது தூசுபடியாமல் வைத்துக் கொள்வதும் நமது தொடர்ச்சியான பணியாகும். சத்தியத்தின் இருப்பிடம் தான் இறைவன் இருக்குமிடம். சத்தியத்தையும் உண்மையையும் கடைப்பிடிப்பவனிடமே கடவுள் அருள் பரிபூரணமாய் இருக்கும். வாழ்க்கையில் எது நடந்தாலும், எந்த முட்டுக்கட்டை தடுத்தாலும் இறைசிந்தனையை விடாது மேற்கொண்டவர்களுக்கு இறையருள் கிடைப்பது உறுதியாகும். புறக்கணிக்கப்பட வேண்டிய மூன்று குணங்கள் ஒத்துழையாமை, கண் மூடித்தனம், இயலாமை ஆகியவை. வாழ்வின் சங்கடமான கட்டத்தில் விட்டுக்கொடுக்கும் குணமே, மனிதனைப் பாதுகாக்கப் போதுமானதாகும். தன்னம்பிக்கையுடன் இருப்பவர்கள் நேர்மையுடன் பிரார்த்தனை செய்து தாங்கள் கேட்டதை இறைவனிடம் இருந்து தவƒமல் பெற்று விடுகின்றனர். நேர்மையுடன் இருப்பதும், தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் மேலும் நேர்மையை வளர்த்துக் கொண்டிருப்பதுமே நிறைவான தூய்மையாகும். வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனுக்காக வாழ்தலாகும். அல்லது உண்மைக்காக வாழ்தல் குறைந்த பட்சம் தனது ஆன்மாவுக்காகவாழ்தலாகும். நம்முடைய எண்ணங்கள் இறைவனை நோக்கித் திரும்பும்போதும், நம்மையே இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் போதும், அனைத்து செயல்களும் அழகாகவும் மாட்சிமிக்கதாகவும், எளிமையாகவும், அமைதியாகவும் மாறிவிடுகிறது. தியானத்தின் மூலம் ஒருவன் ஒருபங்கு தான் முன்னேற முடியும். ஆ„ல் நேர்மையாகத் தன் பணிகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்பவன் வாழ்வில் பத்து மடங்கு முன்னேற்றம்காண்பான். இறைவனின் சொற்கள்ஆறுதலையும், பேரின்பத்தையும், இதத்தையும் அளித்து ஒளியூட்டுகின்றன. இறைவனின் கருணைக் கரங்கள் எல்லையில்லா ஞமூனத்தை மறைக்கின்ற திரையை விலக்குகின்றன. இறைவன் அனைத்து மனிதர்களையும் ஒன்று போலவே நேசிக்கிறான். ஆனால், பெரும்பாலான மனிதர்களின் உணர்வு இருண்டுள்ளதால் தெய்வீக அன்பை அவர்களால் உணர முடிவதில்லை.