logo
home தத்துவம் ஜனவரி 24, 2016
வாழ்க்கையில் தெளிவு ஏற்படுத்தும் வள்ளலாரின் பொன்மொழிகள்
article image

நிறம்

வாழ்வை மேம்படுத்தும் வள்ளலாரின் அமுதமொழி! பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்துவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் முன்வர வேண்டும். கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டுவரமுடியாது. செழும் தமிழால் அன்புடன் பாடும் பக்தர்களின் கொடும் குற்றங்களையும் குணங்களாகக் கொள்வான் இறைவன். வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள். பாவச் செயல்களைச் செய்யாமலும், தீயவர்கள் கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து, அவர்கள் தரத்திற்கு ஒத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் கவலை நீங்கும். சொல்லாலும், பொருளாலும், அறிவாலும் துணிந்து அளக்க முடியாதவன் இறைவன். அவரவர் முயற்சிகளுக்கு ஏற்ப அரியவ„யும் பெரியவ„யும் அவன் விளங்குவான். சோற்றிலே மிகுந்த விருப்பமுள்ள ஒருவன் செய்யும் தவம் சுருங்கிப்போகும். ஆற்றிலே கரைத்த புளி போல அது பயன்தராது. யாரையும் கடுகடுத்த நோக்குடன் பார்க்க வேண்டாம். அதுபோல், பல்லாயிரம் சொற்களை உபசாரமாக பேசுவதை விட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார். பசியி„ல் துன்புற்று, கன்னத்தில் கைகளை வைத்துக் கொண்டு, கண்களில் நீர் கலங்க, வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களின் வருத்தத்தை மாற்றுவதே ஜீவகாருண்யமாகும். நெல் பயிருக்கு நீர் பாய்ச்சுவோரையும், விழியிழந்தோருக்கு ஊன்றுகோல் வழங்குபவரையும், இரவில் வந்தவர்க்கு இடம் கொடுப்போரையும், அஞ்சி வந்து அடுத்தவர்க்கு அபயம் கொடுப்போரையும், பசியினால் தவிப்போர்க்கு அன்னம் கொடுப்போரையும், சேற்றில் விழுந்து திகைக்கின்றோர்க்குக் கைகொடுப்போரையும், ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டோரைக் கரையேற்றுவோரையும், சத்திரம் கட்டித்தருமம் செய்வோரையும், குரு தரிசனம், ஞானிகள் தரிசனம், சிவதரிசனம் செய்வோரையும் ஒரு நாளும் தடுக்கக்கூடாது. எய்தவனுக்குப் பதிலாக, அம்பையோ, அம்பைச் செய்து கொடுத்தவரையோ பழிப்பதால் பயனில்லை.