logo
home தத்துவம் ஏப்ரல் 12, 2016
அத்வைத தத்துவ உண்மைகளை அற்புதமான வார்த்தைகளில் விளக்கியவர் ஓஷோ.. அவற்றில் சில!
article image

நிறம்

"கடவுள் இருக்கிறார் என்று நான் சொல்ல மாட்டேன் இருப்பது எல்லாம் கடவுள்தான் என்று நான் சொல்லுவேன்!" "நீங்களே கடவுளாக இருக்கும்போது எதற்கு வீணாக கடவுள் நம்பிக்கை! உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்!" "தேடுவதை நிறுத்து.தேடியது கிடைக்கும்." "இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது, இந்த கணம் மட்டுமே உள்ளது நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்." "ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம், ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில்தான். உனது விழிப்புணர்வு." "வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல. மனித மனங்களை தவிர." "வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால் இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்." வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒரு வாய்ப்புதான், ஒரு வாசல்தான். "இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிடமுடியும் ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.." "நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல. நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை." "ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது." "உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதை கவனி." "மகிழ்வாக இருப்பது என்பது சென்றடைய வேண்டிய குறிக்கோள் அல்ல அது உன்னுடைய இயல்பு." "ஒரு விஷயத்தை துறக்க வேண்டும் எனில் அதை அனுபவித்திருக்கவேண்டும்." "சோகத்திற்கு இடமில்லாத உலகில் மனிதன் சோகத்தைப் படைத்து வைத்திருக்கிறான்." "சமுத்திரத்தை தீராத தாகத்துடன் ஒரே மூச்சில் குடித்து முடித்து விடுவதைப் போன்றது, தன்னை உணரும் அந்தத் தருணம்."