ஸ்ரீ கிருஷ்ணர் மஹாபாரதத்தில் தூது போகும் முன் திரௌபதியை சந்தித்தார்.
திரெளபதி தனக்கு நேர்ந்த அனைத்து துன்பங்களையும் அழுதுக் கொண்டே அவரிடம் சொன்னாளாம்.
ஏதும் தெரியாதவர் போல் அனைத்தையும் கேட்டு விட்டு திரெளபதி எனக்கு எல்லாம் தெரியும்.இருந்தும் ஏன் அதை உன் வாயால் கேட்டேன் தெரியுமா? நீ நன்றாக அழ வேண்டும் நீ அழுதால் தான் துரியோதனன் விட்டு பெண்கள் அழுவார்கள். என்றாராம். (இது கதை) .
பெண்கள் அழக்கூடாது , அழ வைக்கக் கூடாது என்று பேசி வருகிறோம். ஆனால் க்ருஷ்ணர் அழ வைத்துப் பார்க்கிறார்.. இது ஏன்?
இதற்கும் காரணம் உண்டு. "அழுபவர்கள் பலஹீனமானவர்கள் ஆனால் அடிப்படையில் அன்பு மிகுந்தவர்கள் " என்று மன உளவியல் நிபுணர்கள் சொல்வர். .
இறைவனிடம் தன் குறையோ நிறையோ எனத சொல்லத் துணிகிறோமோ அதை நாம் முழு வீச்சில் , முழு நிறைவோடு சொல்ல வேண்டுமானால் அன்பு நிறைந்து இருக்க வேண்டும்.
அன்பின்றி நிச்சயம் உண்மையான துக்கம் தொண்டைக் குழியை விட்டு வெளிவராது. அப்படி வந்தால் கண்ணீரின்றியும் வரவே வராது.
உண்மை, அன்பு, துக்கம், ஒன்றன் பின் ஒன்றாக வரும் போது கண்ணீர் மட்டும் மறைந்திருக்குமா என்ன?.
உண்மை = க்ருஷ்ணர் ,
அன்பு = திரெளபதி ,
துக்கம் = துரியோதனன்.
துக்கத்தை - அன்பு – உண்மையிடம் சொல்லும் போது கண்ணீர் பெருகி வர வேண்டும் .
"அழுதால் பெறலாமே" என்றார் – மணிவாசகர் .
"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி " என்றார் -சம்பந்தர்
"அழுகை" உண்மையை உணர வைத்து, அன்பினை கசிய வைத்து, துக்கத்தை மறையச் செய்யும் "மந்திரக்கோல் "
நன்றி: Thali + 91 96009 99279:
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம்
நிறம்