logo
home தத்துவம் ஜூலை 03, 2016
தந்தையாகவும், தாயாகவும், நண்பனாகவும், ஆன்மாவாகவும் உள்ள கடவுள் கருத்து இந்து மதத்தில் மட்டுமே உள்ளது - சுவாமி விவேகானந்தர்
article image

நிறம்

கடவுளைப் பற்றிய கருத்து நமது தாய்த்திருநாட்டில் வளர்ந்துள்ளது போல் வேறெங்கும் இவ்வாறு முழுமையாக வளரவில்லை .ஏனென்றால் கடவுளைப் பற்றிய இந்தக் கருத்து உலகில் வேறெங்கும் இருக்கவேயில்லை .நான் இவ்வாறு உறுதியாகச் சொல்வதைக் கேட்டுநீங்கள் திகைக்கலாம். ஆனால் பிற மத சாஸ்திரங்கள் எவற்றிலேனும் கடவுளைப் பற்றிய நமது கருத்துக்களுக்குச் சமமான கருத்துக்கள் இருந்தால் காட்டுங்கள். 

அவர்களின் தெய்வங்கள் எல்லாம் ஒவ்வொரு குழுக்களுக்கு உரியவர்கள்; யூதர்களின் தெய்வம் , அரேபியரின் தெய்வம் அந்த இனத்தின் தெய்வம் இந்த இனத்தின் தெய்வம் என்றிப்படி உள்ளவர்கள் எல்லாம் ஒவ்வொரு குழுக்களுக்கு உள்ள தெய்வங்கள்

ஆனால் எல்லோருக்கும் நன்மை தருகின்ற, மிகுந்தகருனை வாய்ந்த நம் தந்தையாகவும், தாயாகவும், நண்பனாகவும் நண்பனுக்கும் உற்ற நண்பனாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் உள்ள கடவுள் கருத்து இங்கு இங்கு மட்டுமே உள்ளது. 

சைவர்களுக்கு சிவபெருமானாகவும் வைணவர்களுக்கு விஷ்ணுவாகவும், கர்ம நெறியினருக்கு கர்மமாகவும், பௌத்தர்களுக்கு புத்தராகவும் சமணர்களுக்கு அருகராகவும் ,கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் ஜெஹோவாவாகவும் .முகமதியர்களுக்கு அல்லாவாகவும் , ஒவ்வோர் இனத்திற்கும் ஒவ்வொரு தெய்வமாகவும், வேதாந்திகளுக்கு பிரம்மமாகவும் இருக்கின்ற, அந்த ஒரே கடவுளே எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற உண்மையும் அந்த இறைவனின் பெருமையும் இந்த நாட்டிற்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

- சுவாமி விவேகானந்தர்


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 


தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com