logo
home தத்துவம் ஜூலை 07, 2016
கோவிலுக்கு செல்வதன் அவசியம் என்ன? சுவாமி விவேகானந்தரின் அருமையான உவமை
article image

நிறம்

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். 
அப்போது சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் குறுக்கிட்டுக் கேட்டார்...
"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ? ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா?” என்று....
அந்த அன்பரைப் பார்த்து விவேகானந்தர், 
“கொஞ்சம் தண்ணீர்  கிடைக்குமா ? தாகம் எடுக்கிறது” என்று.... விவேகானந்தர் அன்பரிடம் குடிக்க தண்ணீர் கேட்க...
அந்த அன்பர்  ஓடிப் போய் ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தார்.
அந்த அன்பரைப் பார்த்து 
“நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த செம்பு.? செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?” என்று விவேகானந்தர் கேட்டார்.
குழம்பிப் போனார் அந்த அன்பர்.
“அது எப்படி முடியும்?” என்று கேட்டார் அன்பர்.
இப்போது பதில் சொன்னார் சுவாமி விவேகானந்தர் ...
“ஆம் சகோதரனே.. தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா? அதுதான் ஆலயம்..! ஆனாலும் செம்பே தண்ணீர் ஆகாது..! ஆலயமே ஆண்டவனாகாது..!” என்று விவேகானந்தர் கூறினார்.
விவேகானந்தரின் பதிலால் மகிழ்ந்த அன்பர் விவேகானந்தரிடம் ஆசிபெற்றுச் சென்றார்.



குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                        

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com