logo
home தத்துவம் ஆகஸ்ட் 01, 2016
நம்மையும் அறியாமல் நமக்குள் புகும் ஒரு வன்மையான ஆயுதம் கோபம்.  
article image

நிறம்

ஒரு சிலருக்கு கோபம் என்பது மேன்மையையும், ஒரு சிலருக்கு கீழ்மையையும் பெற்றுத் தரும்.
இறை சிந்தனையோடு செயல்படுவோருக்குக் கூட இந்த ஆயுதம் திடீரென தன் வன்மையை காட்டி விடும்.       அமைதியாய் இருக்க பயிற்ச்சி எடுத்தவரிடம் தான் இது அதிகமாக ஊடுருவிச் செல்லும்.                அப்படி ஒருவரிடம் அடிக்கடி சென்றது. ஆனால் அதுவே அவருக்கு சிறப்பாய் அமைந்து  க்ரோதபப்டாரகர் எனும் பட்டத்தை துர்வாஸ மகரிஷிக்கு பெற்று தந்து விட்டது.                  
பண்டாகரன் என்பவனிடம் சென்றது.    
அவன் வம்சத்தையே வேரோடு பிடுங்கி எறிந்தது.            
இரண்டு இடத்திலும் சென்ற ஆயுதம் ஒன்று தான்.  ஆனால் இரண்டும் அம்பாளின் அருளால் மாற்றம் பெற்றது.  
கோப, தாபங்களால் தாபப்படும் நமக்கு இறையருள் கிடைக்க வழி எது என்று ஆராய்ந்துப் பார்த்து (எண்ணற்ற வழிகள் உண்டு) அதில் ஏதேனும் ஒரு வழியை கடைப்பிடித்தால் எந்த வன்மையான ஆயுதங்ளும் நம்மை தாக்காது.
கோப , தாபம் இல்லாமல் வாழ்க்கை வாழ முடியாது. அதை எப்படி எங்கே உபயோகப்படுத்துவது எனும் வழிமுறையை மட்டும் தெரிந்து கொண்டு விட்டால் போதும் அதை நமக்கு காட்டுவதற்கே அம்பாள் அனைத்து ஆயுதய்களையும் கையிலேந்தி ஆதி பராசக்தியாக காட்சித் தருகிறாள்.  நம் கையில் ஆயுதம் இருந்தால் குற்றம்.      
அதே ஆயுதத்தை அம்பாள் கையிலேந்தி நின்றால் அனுக்கிரஹம்.        
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டால் எல்லாம் செளக்கியமே " .
                                          
Thali ‪+ 91 96009 99279

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            
www. aanmeegamalar.com 
எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com