நீர், நெருப்பு, காற்று, நிலம் ராசிகாரா்களும் அவா்களின் தன்மைகளும் 12 ராசிகளுக்கும் அவற்றின் தன்மையைப் பொறுத்து குணங்கள் மாறுபடுகின்றன. ராசிகளில் சரராசிகள், ஸ்திர ராசிகள், உபய ராசிகள் எனவும் பிரித்து அவற்றிற்குறிய குணாதிசயங்களைக் கூறி இருக்கிறார்கள். மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் குணாதியங்கள் அதிகம் உள்ளவர்கள் மேஷம் முதல் கன்னிவரை வடக்கு ராசி எனவும், துலாத்திலிருந்து மீனம் வரை தெற்கு ராசிகள் எனவும் அழைக்கப்படும். இவை தவிர நீர், நெருப்பு, காற்று, நிலம் என்று நான்கு வகையாக ராசிகளை பிரித்துள்ளனர். இவற்றை வைத்து அந்த ராசிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம். நீர் ராசிகள்: கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய மூன்று ராசிகளும் நீர் ராசிகள். இந்த ராசியில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்கள் கற்பனை வளம் கொண்டவர்கள். குளிர் பானங்கள், துணிமணி சம்மந்தப் பட்ட தொழில் கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள். நெருப்பு ராசிகள்:: மேஷம்,சிம்மம்,தனுசு ஆகிய மூன்று ராசிகளும் நெருப்பு ராசிகள். இந்த ராசியில் பிறந்தவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள். நெருப்பு ராசியாக இருப்பவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள். தலைமை தாங்குபவர்களாகவும், தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். காற்று ராசிகள்: மிதுனம்,துலாம்,கும்பம் ஆகிய மூன்று ராசிகளும் காற்று ராசிகள். இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். காற்று ராசியாக இருப்பவர்கள் தற்பெருமையுடன் உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள். நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள். நில ராசிகள்: ரிஷபம்,கன்னி,மகரம் ஆகிய மூன்று ராசிகளும் நில ராசிகள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்து மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுவார்கள்.
நிறம்