நம் கையில் என்னற்ற ரேகையில் இருந்தாலும் மிக முக்கியமான ரேகைளை மட்டும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. விதி ரேகை நம் கையில் உள்ள செல்வத்தையும், நாம் வாழ்க்கையில் பெறும் வெற்றியையும். இருதய ரேகை = நமது மன நிம்மதியையும், மற்றும் ஞானத்தையும். புத்தி ரேகை = நம் வாழ்க் கையில் கிடைக்க இருக்கும் வெகுமதி, புத்தியால் கிடைக்கும் வெற்றியையும், அறிவாற்றலையும். ஆயுள் ரேகை = நம் ஆயுளை யும், நம் உடல் ஆரோக்கியத்தையும். செவ்வாய் ரேகை = ஆயுள் ரேகைக்கு துனையாக செயல்படும்.மற்றும் தெய்வபக்தியும், வீடு நிலம், குறிக்கும். காதல் ரேகை = நம் காதல் வாழ்க்கையும். தோல்வி அடையபோகும் சமயம் சரியாக அதன் மீது குறுக்கீட்டு ரேகை வளரும். ஞான ரேகை அல்லது குரு ரேகை = ஒருவர் ஆன்மிக எண் ணத்தையும், எதையும் பகுத்து ஆராயதலையும், ஆபத்து வருவதை முன் கூட்டியே உணரும் ஆற்றல் உடையவராகவும் இருப்பார். படத்தில் காட்டப்பட்ட சூரிய ரேகை நம் கையில் இருப்பது= மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைவதை குறிக்கும். மேலும் 35 வயதிற்கு மேல் ஒரு ஸ்திரமான வாழ்க்கை அமையும். படத்தில் உள்ள ரேகைகளில் ஏதேனும் குறூக்கீட்டு ரேகைகள், அல்லது தீவுக்குறிகள் இருந்தால் அந்த ரேகை பாதிப்பு அடைந்துள்ளது என்று அர்த்தம். அதன் பாதிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்றால் எந்த இடத்தில் பாதிப்பு தெரி கிறதோ அந்த ரேகையின் இடம் குறிக்கும் வயதில் அப் பாதிப்பானது தெரியும்.
நிறம்