1-ம் தேதி பிறந்தவர்கள் பொதுவாகத் தன் விருப்பபடியே நடப்பவர்கள். இவர்களுக்கு பிறரை அனுசரித்து போகும் குணம் குறைவு. பொறுமையுடன், மற்றவர்களையும் அரவணைத்துச் சென்றால், வாழ்க்கையில் பெரும்வெற்றி அடையலாம். தன்னம்பிக்கை மிக உண்டு. அரசு மற்றும் அதிகார உத்தியோகங்களுக்குச் செல்வார்கள். 2-ம் தேதி பிறந்தவர்கள் உயர்ந்த இலட்சியத்தை ஏற்றுச் செயல்படுவார்கள். கற்பனைச் சக்தியும் அதிகம் உடையவர்கள். சாந்தமும், அமைதியும் உடையவர்கள். மக்கள் சீர் திருத்த எண்ணங்கள் உருவாகும். பேச்சு வார்த்தைகள் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் போன்றோர் உருவாகும் நாள் இது. 2ம் எண்ணின் முழு ஆதிக்கமும் கொண்டது. 3-ம் தேதி பிறந்தவர்கள் சிறந்த சிந்தனையாளர்கள். தங்களுடைய ஆற்றலை ஆக்கரீதியாகப் பயன்படுத்திவெற்றி காண்பார்கள். பொறியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏதாவது ஒரு துறையில் வல்லுநர்களாக வருவார்கள். சிறந்த எழுத்தாளராகவும் இருப்பார்கள். கதை, கவிதை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். 21 வயதிற்கு மேல்தான் நல்ல திருப்பங்கள் ஏற்படும். 4-ஆம் தேதி பிறந்தவர்கள் இவர்கள் கரகரப்பாகப் பேசுவார்கள். கண்டிப்பும், அதிகாரமும் நிறைந்து பேசுவார்கள். இவர்களுக்குத் துணிச்சலும், பலமும் அதிகம். போலீஸ், போர் வீரர்கள் போன்று உடல்வாகு அமையும். அடிக்கடி இவர்களுக்குச் சோதனைகள் ஏற்படும். அதைக் கண் கலங்காமல், செயல்பட்டு வெற்றி அடைவார்கள். இளமையிலேயே திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது! குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு! தெய்வ பக்தியும் இருக்கும் 5-ஆம் தேதி பிறந்தவர்கள் புதன் கிரகத்தின் முழு அம்சம் பெற்றவர்கள். நல்ல தெய்வீக வாழ்க்கை அமையும். அறிவும், தெளிவும் உண்டு. இவர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சத்தி உண்டு. சிறு வயது முதலே குறிப்பிட்ட இலட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது. 6-ம் தேதி பிறந்தவர்கள் எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். எவரையும் சரிக்கட்டி, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பெண் தன்மையும் காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். அடக்க சுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. கலைகளில் (64 கலைகளில் ஏதாவது ஒன்று அல்லது சில) மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்கள் சாந்தமானவர்கள்தாம். கோபம் வந்தால் விசுவரூபமாகிவிடும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள். சுகம் நிறைய அனுபவிப்பார்கள் 7-ம் தேதி பிறந்தவர்கள் வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உடையவர்கள். இவர்களுக்கு மனைவியும் வெளிநாடு, அன்னிய சம்பந்தம் அல்லது அடுத்த ஜாதி போன்றவற்றில் அமைவர். இவர்கள் மிகவும் கண்டிப்பு மிக்கவர்கள். நேர்மையை மிகவும் மதிப்பார்கள். ஆன்மிகத்தில் மிகுந்த விருப்பமுடையவர்கள். நல்ல ரசிப்புத் தன்மையும் உடையவர்கள். மற்றவர்களின் கருத்தைக் கேட்பவர்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும். மனைவியை ஓரளவு அனுசரித்துச் சென்றால் நல்ல வாழ்க்கை அமையும். 8-ம் தேதி பிறந்தவர்கள் இவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அமைதியான வாழ்க்கை உண்டு. மதப்பற்று அதிகம் உண்டு. இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள். சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்ல இயல்பினர். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள். 9-ம் தேதி பிறந்தவர்கள் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுபவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். சுதந்திரமான எண்ணங்கள் நிறைந்தவர். புதிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் உடையவர்கள். மற்றவர்களை அடக்கி ஆள விரும்புவார்கள்! உற்றார், உறவினர்களிடம் கூட அடிக்கடி சண்டை போடு குணமும் உண்டு
நிறம்