சிவனுக்கு மல்லிகை பூ அர்ச்சனை செய்யுங்கள் சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சனை செய்பவர்கள் ராஜயோகம் பெறுவார்கள். ஐந்து கோடி மலர்கள் அர்ச்சனை செய்தால் முக்தி பெறலாம். ஒருகோடி மலர்களால் அர்ச்சனை செய்தால் ஞானம் பெறலாம். அரைக் கோடி மலர்களால் அர்ச்சனை செய்து ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஐந்து லட்சம் தடவை ஜபித்தால் சிவன் அருள் கிடைக்கும். லட்சம் அருகம்புல் அர்ச்சித்தால் தீர்க்காயுள் ஏற்படும். லட்சம் கரு ஊமத்தையை கொண்டு அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். லட்சம் கரவீர புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால் நோய்கள் நிவர்த்தியாகும். லட்சம் மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்தால் அழகிய மனைவி கிடைப்பாள். ஐம்பதினாயிரம் மலர்களால் அர்ச்சித்தால் வியாதிகள் நிவர்த்தியாகும். பன்னீராயிரத்து ஐந்நூறு மலர்களால் அர்ச்சனை செய்தால் கல்வி, கேள்விகளில் சிறந்தவனாவான். பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க சத்ருபயம் நீங்கப் பெறுவார்கள் என்று சிவபுராணம் கூறுகிறது.
நிறம்