திங்கட்கிழமை: பகைவரோடு போராடி,போராடி களைத்துபோன நேர்மையாளர்கள், தங்களது நியாயமான பிரச்னைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்; செவ்வாய்க்கிழமை: குலதெய்வம் தெரியாதவர்கள்,குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள்,குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள்,குல தெய்வத்தை அறியாமல் இருந்து ,அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்; இப்படி 8 செவ்வாய்க்கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்; புதன் கிழமை: வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர்,புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 8 புதன்கிழமைகளுக்குச் செய்து வர ,நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும். வியாழக்கிழமை: தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள்,வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது; வெள்ளிக்கிழமை: பணரீதியான பிரச்னைகள் இருப்போர்,பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது; சனிக்கிழமை: பண நெருக்கடி,தொழில் மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என எல்லாவிதமான பிரச்னைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது. ஞாயிற்றுக்கிழமை: நீண்டகாலமாக வழக்குடன் போராடிக்கொண்டிருப்பவர்கள்(எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி) ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது. இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி,அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும்;இது ரொம்ப முக்கியம்.முட்டை,முட்டை கலந்த கேக்,புரோட்டா என மறைமுக அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ,அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்;துக்கம்,பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும்,விட்டு விட்டு செய்தாலும் போதுமானது.அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.எச்சரிக்கை!!! இந்த தெய்வீக ரகசியத்தை ருத்ராட்சத் துறவி,சிவகடாட்சம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சீடரும்,நமது ஆன்மீக குருவுமாகிய திரு.சிவமாரியப்பன்,புளியங்குடி அவர்களுக்கு நன்றிகள்!!!
நிறம்