வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும் சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம். மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள். இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்களாம். முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள். வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார். மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா. மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது. இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும். அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி. இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும். இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு. உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும். வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும். விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு. பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு. செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும். நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும். வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு. ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும். இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி. இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும் புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம். நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும். அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது. இரசமணியின் பலன்கள் 1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும். 2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும். 3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும். 4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும். 5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்.. 6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும். 7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும். 8.திருமண தடையை நீக்கும். 9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும் 10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது. 11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம். 12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும். 13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும். மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்: 1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும். 2.கீழே போட்டால் உடையாது , 3.உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட கரண்ட் ஷாக் போல அடிக்கும்(வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் ) “விதியாளி காண்வான் பாரு” என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.
நிறம்