பொதுவாக எந்த மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போதும் அந்த மந்திர உச்சாடனப் பலன் ஒருபுறம் கிடைத்தாலும், அந்த மந்திரத்தை ஜெபிக்கும் திசைக்கு ஒரு பலன் கிடைக்கும். அந்தவகையில் எந்த திசை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும் அதனால் என்னபலன் கிடைக்கும் என அறிந்து கொள்ளவேண்டும் கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியப் பலன் கிடைக்கும். தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீர்ந்து நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை வர வாய்ப்புகள் அதிகம். தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வறுமை கிடைக்கும் மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு அதிகரிக்கும். வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகள் நம்மை அண்டாமல் காக்கும் வடக்கு நோக்கி ஜபம் செய்தால் பொன்னும், கல்வியும் கிடைக்கும். வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் இறை முக்தி எளிதாக கிடைக்கும் குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.
நிறம்