logo
home பலன்கள் நவம்பர் 23, 2018
கோவிலில் நடைபெறும் தீபத் திருவிழாவை பார்த்தால் பூர்வ வினை பாவங்கள் தீரும்
article image

நிறம்

கார்த்திகை தீப நாளின் போது காலையில் எழுந்து குளித்துவிட்டு முதலில் குலதெய்வத்தை நினைத்து பூஜையை தொடங்க வேண்டும். நாள் முழுக்க விரதமிருந்து சிவனையும் முருகனையும் மனதில் நிலை நிறுத்தி அவர்களின் நாமத்தை ஜபித்தவாறே வேலைகளை செய்யலாம். மாலையில் வெற்றிலை பாக்கு, பொரி, கடலை போன்றவற்றை பிள்ளையாருக்கும், முருகனுக்கும் சிவனுக்கும் நைவேத்யம் செய்ய வேண்டும். பின் சரியாக ஆறுமணிக்கு வீட்டில் விளக்கேற்ற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஆறு விளக்குகளையாவது ஏற்றி ஆறுமுகனை வழிபட வேண்டும். அதன் பின் விரதத்தை முடித்துக்கொள்ளலாம். பல்வேறு கோவில்களில் ஆயிரம் தீபம், லட்ச தீபம், கோடி தீபம், அணையா தீபம் என பல்வேறு தீபங்களை ஏற்றி சிவனையும் முருகனையும் அக்னி வடிவமாக வழிபடுவது வழக்கம். அந்த நிகழ்வில் நாம் கலந்துகொண்டு தீபத்தை ஏற்றுவதன் பயனாக நம்முடைய பூர்வ வினை பாவ தோடங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் ஒளி வீசும்.