logo
home மருத்துவம் ஜனவரி 24, 2016
கிரீன் டீ நல்லதா கெட்டதா?
article image

நிறம்

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம் . கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன. எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன் டீயின் நன்மைகள்: ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது . ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது, ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது புற்றுநோய் வராமல் தடுக்கிறது, ற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. ருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது. பருக்கள் வராமல் தடுக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.