logo
home மருத்துவம் ஏப்ரல் 20, 2016
கொளுத்தும் கோடை வெயிலிலும், ஜொலிக்கும் பொலிவான முகம் பெற எளிய முறை
article image

நிறம்

பெண்கள் பொதுவாக சிவப்பாக தெரியவேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கிரீம்களை பூசுவது வழக்கம். ஆனால் மிக எளிமையான முறைகளின்மூலமே சிவப்பழகுடன் ஜொலிக்கலாம். முட்டைகோஸ் விழுது, பால், தேன் கலந்து முகத்திற்கு பேக் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். பாதாம் எண்ணெயுடன் சுத்தமான சந்தனத்தை குழைத் து முகத்தில் பூச வேண்டும், இந்த கலவை காய்ந்தவு டன் முகத்தை கழுவ வேண்டும், தொடர்ந்து சிறிதளவு பாலை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இப்படி 3-4 வரை தொடர்ந்து செய்தால் பளிச்சென்று மாறும். முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் பூசி வந்தால் சருமம் சிவப்பாக மாறுவதுடன் மிருதுவாகவும் இருக்கும். வாரத்திற்கு ஒருமுறை சிறிது தேன், சிறிது பாலேடு, சிறிது வெள்ளரிச் சாறு, கடலைமாவு நான்கையும் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்குப்பின் கழுவி வரலாம். மசித்த வாழைப்பழத்துடன், சிறிது தேன், சிறிது பயற்ற மாவு குழைத்து முகத்தில் தடவி ஊற வைத்து 15 நிமிடம் கழித்து கழுவி வரலாம். இப்படி செய்து வந்தால் நிச்சயம் நிறம் மாறுவதைக் காணலாம். இந்த முறைகளால் கோடை வெயிலின் தாக்கத்தால் பொலிவற்று காணப்படும் முகம் பளிச்சென்று அழுகுடன் மிளிரும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com