logo
home மருத்துவம் மே 15, 2016
மலம், சிறுநீர் கழித்த பின் வாயை கண்டிப்பாக கொப்பளிக்கவேண்டும், கெட்ட அணுக்களை விரட்டினால் நோய் அண்டாது
article image

நிறம்

அக்காலத்தில் மலம் அல்லது சிறுநீர் கழித்த பின் வாயில் நீர் ஊற்றி கொப்பளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த முறை கேலியும் கிண்டலுக்கும் உள்ளானதால் படிப்படியாக அந்த முறை மாறி விட்டது. ஆனால் அதில் உள்ள அற்புதமான உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட செயலை தற்போதைய விஞ்ஞானம் அலசி ஆராய்ந்துள்ளது. மலம் அல்லது சிறுநீர் கழித்த பின், வாயை கொப்பளிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை விஞ்ஞானம் அங்கீகரித்து உள்ளது. கழிவு பொருட்களாலான மலம் மற்றும் சிறு நீரில் கெட்ட அணுக்கள் அடங்கி இருக்கும். வயிற்றின் குடலில் இருந்து மலம் அல்லது சிறுநீர் வெளியேறும் போது துர்நாற்றம் உடைய வாயு மேலெழுவது வழக்கம். அப்போது துர்நாற்றமும் நோயணுக்களும் பரவும். இவ் அணுக்களையும் துர்நாற்றத்தையும் அகற்ற வாயை கொப்பளிப்பதே சரியான வழி. இப்படி செய்யா விட்டால் நாற்றத்தையும் நோயணுக்களும் உடலில் சேர்ந்து நொய் தொற்று எளிதாக நம் உடலை பற்ற ஏதுவாகி விடும். இதை அந்தக் காலத்திலேயே கண்டுபிடித்துதான் நமது முன்னோர் மேற்கண்ட வழிமுறையை கடைபிடித்துள்ளனர். நாம்தான் அதை மூடப்பழக்கம் என்று கைவிட்டுவிட்டு அவதிகள் பலவற்றை பெற்றுள்ளோம். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalr.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com