logo
home மருத்துவம் நவம்பர் 05, 2018
இதயத்தை காக்கும் கட்டிப்பிடி வைத்தியம்
article image

நிறம்

இரத்தம், இதயம் சார்ந்த நோய் உள்ளவர்களுக்கு இயற்கை மருத்துவமாக தினமும் 5 நிமிடங்கள் 3 வேளை மருத மரத்தை கட்டிப்பிடித்து வந்தால் போதும். இவ்வாறு செய்யும்போது உடலுக்கும் மனதுக்கும் இயற்கையாகவே ஒருவித ஆற்றலும், நமது தோலில் உள்ள துவாரங்கள் வழியாக உள் உடலுக்கு தேவையான இரத்த சீரோட்டம் போன்றவை அற்புதமாக நடைபெறுவதால், இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு கிடைக்கிறது. மருத மர பட்டையிலிருந்து தயாரிக்கப்படும்... அரிஷ்டம் என்னும் மருந்து. மிகவும் அற்புதமான பலனைத் தருகிறது. பெரும்பாலான சித்த மருத்துவர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். இரத்தம், இதயம் சார்ந்த பெரும் பாலான மருந்து கல வைகளில்... இதன் பட்டையை முதன்மை மருந்தாக பயன் படுத்துகிறார்கள். மருதமரம், மருகமரம், அர்ஜுணமரம், நீர்மருது போன்ற வழக்கப் பெயர்களை கொண்டு அறியப்படும் பெரு மர வகையை சேர்ந்த இம்மரத்தின் தாவரவியல் பெயர் TERMINALIA ARJUNA என்பதாகும். வளரும் மண்ணின் தன்மைக்கேற்ப நிறம் மாறுபடுவதால் பில்லமருது, கருமருது, வெண் மருது என்று பிரிக்கபட்டாலும் இதன் மருத்துவ பயன்பாடு ஒன்றாகவே இருக்கிறது. LIPID PEROXIDATION என்ற முறையால் பிரியும் வேதிப் பொருள் அதிக மிருப்பதால் இரத்தம் உறைதன்மையை நிதானபடுத்தும் எனவே தான் இரத்தம், இதயம் சார்ந்த பெரும்பாலான மருந்து கலவைகளில் இதை முதன்மை மருந்தாக பயன்படுத்துகிறார்கள். வைகை நதிக்கரையின் ஓரிடத்தில் மருது மரங்கள் அடர்த்தியாக இருந்து அந்த இடம் மருதத்துறை என்றாகி அதுவே மருவி இப்போதைய மதுரை என்றாகியிருப்பதாய் வரலாற்று குறிப்பு. பழைய கட்டுமான தொழிலில் அதிக மாக பயன்பட்ட தூண் களும் மருது தான்... எனவே இதை Queens pride of INDIA என அழைத்தார்கள்.