logo
home ஆன்மீகம் ஜனவரி 23, 2016
பிரதோச விரதமும் அதன் சிறப்புகளும்
article image

நிறம்

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது. இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் கடைப்பிடிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் உணவருந்த வேண்டும். பிரதோசத்தில் பத்து வகைகள் உள்ளன. 1. நித்திய பிரதோசம் 2. நட்சத்திர பிரதோசம் 3. பட்ச பிரதோசம் 4. மாதப் பிரதோசம் 5. பூர்ண பிரதோசம் 6. திவ்ய பிரதோசம் 7. அபய பிரதோசம் 8. தீபப் பிரதோசம் 9. சப்த பிரதோசம் 10. மகா பிரதோசம் நித்திய பிரதோஷம் - அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை பட்ச பிரதோஷம் - சுக்லபக்ஷ சதுர்த்தி மாலை மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பக்ஷ திரயோதசி மகாப் பிரதோஷம் - சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ திரயோதசி பிரளயப் பிரதோஷம் - ஈசனிடம் ஒடுங்கும் பிரளயக் காலம் திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சோமவாரப் பிரதோசம் எனவும், சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படுகிறது.