பெருமாளை துதித்துப் பாடியவர்களை ஆழ்வார்கள் என்றும் குறிப்பிடுவோம். ஆனால் பெருமாளின் பக்தரான நம்மாழ்வாரை துதித்துப் பாடி ஆழ்வார் என்றும் சிறப்பை பெற்றவர்தான் மதுரகவிஆழ்வார். மதுரகவி ஆழ்வார் அயோத்தியில் இருந்தபோது தென்திசையில் இருந்து ஒரு ஜோதியைக் கண்டார். அந்த ஜோதியை பார்க்க வேண்டி தென் திசை நோக்கி நடந்தார். அப்படி அவர் நடந்து வந்தது தாமிரபரணிக் கரையோரம், அந்தக்காலத்தில் அப்பகுதி “குருகூர்” என்று அழைக்கப் பட்டது. இது திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது. அங்கு ஒரு புளியமரத்தின் கீழ் உள்ள ஒருவரிடம் அந்த ஜோதி கலந்தது. அவர் ஆழ்வார்களிலெல்லாம் சிறந்த ஆழ்வாரான நம்மாழ்வார் என்பதை புரிந்து கொண்ட மதுரகவியாழ்வார் அவரிடம் சரணடைந்தார். அவரையே தம் குருவாக ஏற்றுக் கொண்டார். இறைவனைப் பற்றி புகழ்ந்து பாடாமல், நம்மாழ்வாரைப் பற்றியே பதினோரு பாடல்களைப் பாடி துதித்தார். பரம்பொருளைப் பாடாமல் அவரின் பக்தரான நம்மாழ்வாரைப் பின்பற்றியே பரமபதம் அடைந்தார் மதுரகவியாழ்வார். இதைவிடச் சிறப்பு என்னவென்றால், பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்ற பழமொழிக்கு ஈடாக, நம்மாழ்வார் அமர்ந்து தவம் செய்த புளியமரமும் கூட புளியாழ்வார் என்று பெயர் பெற்றது.
நிறம்