
உலகில் உள்ள மதங்களில் இன்றும் இந்து மதம் தலைசிறந்த மதமாகவும், எளிமையான, மென்மையான மதமாக திகழ காரணம், இந்து மதத்தின் தத்துவங்கள் அனைத்திற்க்கும் செய்முறை விளக்கம் உண்டு என்பதாலேயே, இந்து மதத்தை நாடி எந்த வித அழைப்பும் விடுக்காமல் வெளிநாட்டு மக்கள் தாமோகவே வந்துக் கொண்டிருக்கின்றனர். இந்து மதத்தில் "நானே கடவுள்" என்ற அத்வைத நிலையை அடைவதை "நிர்விகல்ப சமாதி நிலை" என்று பதஞ்சலி யோகம் கூறுகிறது.இந்த நிலையை அடைந்தால் மரணத்தை வென்று, என்றும் வாழும் சாகாநிலையை அடையலாம். ஆனால் பல கோடி மனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்த நிலையை அடைந்தவர்கள்.... புகைப்படத்தில் விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் சமாதி நிலையில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம். சமாதி நிலையில் இருப்பவர்கள் மூச்சு நின்றுவிடும்.உடல் இறுகிவிடும்.பிணம் போன்ற நிலையை உடல் அடையும்.ஆனால் உயிர் இருக்கும்.ஆனால் நிர்விகல்ப சமாதியில் இருப்பவர்கள் நானே இறைவன் என்ற தெய்வீக நிலையில் இறைவனுடன் ஒன்றாக கலந்த அனுபவத்தில் உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் இருப்பார்கள்.. நிர்விகல்ப சமாதி நிலையில் 21 நாட்கள் தொடர்ந்து இருக்கும்போது யோகிகள் தங்கள் உயிரை பிராண சக்தியாக்கி உச்சந்தலையில் உள்ள பிரம்மந்திரம் என்னும் துளையின் வழியாக வெளியேற்றுகிறார்கள்.... அவர்களது ஆத்மா மீண்டும் மறுபிறவி எடுக்காமல்,பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபட்டு ,என்றும் வாழும் "மரணமில்லா வாழ்வு" வாழ்கிறார்கள்.தெய்வ நிலை அடைகிறார்கள்.... இந்த மரணத்தை வெல்லும் வழியை பதஞ்சலியோகம் கூறுகிறது..... விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் சமாதி நிலையில் தொடர்ந்து 6 மாத காலம் இருந்தார். அந்த நிலையில் அவரது உடலை அவரது குருவான தோதாபுரி அழியாமல் பாதுகாத்தார்.. ...பிறகு யோகத்திலிருந்து மீண்டவுடன் அடிக்கடி சமாதியில் ஆழ்ந்து விடுவார்.அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்டத்தையே இங்கே நீங்கள் காண்கிறீர்கள்.அவரது உடலை பிடித்துக்கொண்டு நிற்பவர் ஹிருதையர் என்னும் சீடர்.