
நிறம்
ருத்ராஷம் உருண்டை வடிவம் கொண்டது. சிவனின் கண்ணில் இருந்து வந்தது. பிரம்ம படைப்பு. இதன் விலை குறைவு. இது சோப்புக்காய் அளவில் கிடைக்கும்.
பத்ராஷம் நீண்டு தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. இது விஸ்வாமித்ர படைப்பு. ஒரு முகத்தில் இருந்து எட்டு முகம் வரை கிடைக்கும். இரட்டை வாழைப்பழம் போல இரண்டு பத்ராஷம் இணைந்து இருந்தால் அதற்கு கௌரி சங்கர் என்று பெயர். மூன்றாக இணைந்து இருந்தால் பிரம்ம விஷ்ணு மகேஸ்வரன் என்று பெயர். இதேபோல் ருத்ராஷம் கூட இருக்கும்.
பிரம்ம புராணத்தில் புளசிய பிரம்மன் யாகம் செய்தபோது வெளிவந்தது தான் சத்ராட்சம் கிடைப்பது மிக மிக அரிது. குடும்ப அமைதிக்கும் மன சாந்திக்கும் இது மிகவும் உகந்தது. காலப்போக்கில் இது அழிந்துவிட்டது ஏதாவது காட்டில் அல்லது யாராவது மகானிடம் இருக்கலாம்.