logo
home ஆன்மீகம் ஜூன் 11, 2016
ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபதியான தன்வந்தரி உருவான விதமும், அவரை தேவராக மாற்றிய விஷ்ணுவின் அணுக்கிரகமும்
article image

நிறம்

மக்களின் நோய் நொடிகளை தீர்த்து, ஆரோக்கியமான வாழ்வை அளிப்பவர் தன்வந்தரி, அவரைத்தான் மருத்துவ உலகின் கடவுளாக மக்கள் வழிபடுகின்றனர். ஆயுர்வேத மருந்துகளின் அதிபதியாகவும் அவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட அற்புதமான தன்வந்தரி தோன்றிய வரலாறு மிகவும் சுவாரஸ்யம் மிகுந்தது. தன்வந்தரியை ஆதிகாலத்தில் ஒரு தேவராகத்தான் மக்கள் வழிபட்டனர். தேவர்களும் அசுரர்களும் திருபாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவர்தான் தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். அப்படி அவர் வெளியில் வந்தவுடன் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என மகாவிஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் " எனக் கூறியப் பின் மறைந்து போனார். வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து, அவர்களை தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது. வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைத்தது. அப்போதும் தன்வந்தரி தனது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றது. அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொண்டனர். தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபராகவும் போற்றப்பட்டார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது. தன்வந்தரி தனது கையில் அமிருதக் கலசத்தை வைத்துக் கொண்டு உள்ளவாறு காட்சி தருகின்றார். ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் அவருக்கு தனி சன்னதி உள்ளது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்தரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபாட்டு வருகின்றனர் எனக் கூறுகிறார்கள். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com