
நிறம்
- கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும்.
- ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.
- விநாயகரை ஒரு முறையும், சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷ்ணுவை நான்கு முறையும், லட்சுமி தாயாரை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.
- நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றினால் நன்மை பயக்கும். தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.
குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம்