பன்னிருகைகளால் வாரி வழங்கும் வள்ள லாக முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். வாழ்வு வளம் பெற ஆறுமுகனின் திருவடிகளைப் பணியுங்கள். உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து ஆறுதல் இன்றி அலைகின்றன. அறுபடை வீடுக ளைத் தரிசித் தால் வாழ்வில் நிம்மதி நிலைத்திருக்கும். தமிழ் தெய்வமான முருகன் கருணை மிக்க ஆறுமுகங் களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு அடியார்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிறான். வெற்றி வேலை வணங்கியவர் களுக்கு தீவினை அகலும். இதையே, "வேலுண்டு வினை யில்லை' என்னும் பழ மொழியாக கூறினார்கள். ஆறுமுகனை தாங்கும் பேறு பெற்றது மயில். முருகனின் திருவடிகளைச் சுமக்கும் மயிலை வணங்குபவர்களுக்கு பயம்நீங்கும். உயிர்களை எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான். ஆனால், முருகனின் அடியார்களைக் கண்டால் அஞ்சுவான். நம் இதயக்குகையில் முருகன் வீற்றிருக்கிறான். அதனால், அவனை "குகன்' என்று போற்றுவர். கடவுள் வணக்கம் தேவையா? கடவுளை வணங்காமல் வாழ முடியாதா? என்றெல்லாம் சிந்திக்கிறோம். மானம் உள்ள வன் ஆடை உடுப்பான். ஆடையில்லாமல் வாழ முடி யாதா என்ன! அதுபோல, மனம் உள்ளவன் கடவுளை வணங்குவான். புகழை விரும்பாத நல்லவர்களின் பெயரை, கடவுளே மூன்று உலகத்தி லும் விளம்பரப்படுத்தி விடுவார்.
நிறம்