அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் கரதரிசனம் செய்ய வேண்டும், அதாவது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே மனதை ஒருமுகப்படுத்தி கீழ் வரும் ஸ்லோகத்தை உச்சரிக்க வேண்டும். கராக்ரே வஸதே லக்ஷ்மீ: கரமத்யே ஸரஸ்வதி | கரமூலே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம் || அர்த்தம் : கைகளின் நுனி பாகத்தில் லக்ஷ்மி வாஸம் செய்கிறாள். கைகளின் மத்ய பாகத்தில் ஸரஸ்வதி வஸிக்கிறாள் மற்றும் கைகளின் அடி பாகத்தில் கோவிந்தன் உள்ளான். அதனால் விடியற்காலையில் எழுந்தவுடன் உள்ளங் கைகளை தரிசனம் செய்ய வேண்டும். (இன்னொரு அர்த்தம் : உள்ளங்கைகளின் அடிப்பாகத்தில் ப்ரம்மா உள்ளார்.) ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் உள்ளர்த்தம் 1 அ. லக்ஷ்மியின் மஹத்துவம்: கைகளின் நுனி பாகத்தில் லக்ஷ்மி வாஸம் செய்கிறாள். அதனால் வெளிப்புற உலகரீதியான பகுதி லக்ஷ்மி ரூபமாக உள்ளது. அதாவது உலகியலுக்கு (செல்வம் அல்ல, மாறாக பஞ்சமஹாபூதம், அன்னம், வஸ்திரம் போன்றவை) லக்ஷ்மி மிகவும் அவசியம். ஆ. ஸரஸ்வதியின் மஹத்துவம்: செல்வம் மற்றும் லக்ஷ்மியை அடையும்போது ஞானமும் விவேகமும் இல்லாவிட்டால் அந்த லக்ஷ்மியே அலக்ஷ்மியாக மாறி நம் அழிவிற்கு காரணமாவாள். அதனால் ஸரஸ்வதி மிகவும் அவசியம். இ. ஸர்வம் கோவிந்த மயம்: மத்யபாகத்தில் ஸரஸ்வதியாகவும் நுனி பாகத்தில் லக்ஷ்மியாகவும் வீற்றிருப்பவன் கோவிந் தனே. மஹான் ஞானேச்வர் மஹராஜ் அம்ருதானுபவத்தில் சிவ-பார்வதி ஸ்தவ னில் கூறுகிறார், அடி, மத்ய மற்றும் நுனி மூன்றும் வெவ்வேறாகத் தெரிந்தாலும் கோவிந்தனே விசேஷ ரூபத்தில் அங்கு செயல்படுகிறார். பெரும்பாலும் எல்லா காரி யங்களுமே விரல்களின் நுனி பாகத்தால் செய்யப்படுகிறது. அதனால் அங்கு லக்ஷ்மி வாஸம் செய்கிறாள். ஆனால் அனுபவத்தின் மூலம் பெருகும் ஞான ப்ரவாஹம் அந்த விரல்களுக்கு செல் லாவிட்டால் கைகளால் எந்தக் காரியமும் செய்ய முடியாது. - ப.பூ. பரசுராம் பாண்டே மஹராஜ் உள்ளர்த்தம் 2 அ. செல்வச் செழிப்பும், மனதை சுண்டியிழுத்து மோஹத்தில் ஆட்படுத்தும் வெளிப்பட்ட மாயா ஸ்வரூபமான லக்ஷ்மியும் மூல வெளிப்படாத ஸ்வரூபமான கோவிந்தனும் வெவ்வேறானவர் அல்ல; மாறாக இருவரும் ஒன்றே. இந்த ஞானத்தை வழங்குபவளே கல்யாணமயி, ஞானதாயினியான ஸரஸ்வதி. ஆ. லக்ஷ்மி கர்மாவையும், ஸரஸ்வதி ஞானத் தையும் கோவிந்தன் பக்தியையும் குறிக்கின் றனர். இம்மூன்றையும் ஒருங்கிணைப்பதன் மூலமே ஈச்வரனோடு ஒன்ற முடியும். இ. ஞானத்தோடு கூடிய பக்திபூர்வமான கர்மாக் களை செய்வதன் மூலமே ப்ரவ்ருத்தி மார்க் கத்தையும் நிவ்ருத்தி மார்க்கத்தையும் ஸமநிலையில் கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் சாதுர்வர்ணாஸ்ரம தர்மப்படி வாழ்க்கையை மிக நேர்த்தியாகவும் அழகாகவும் கொண்டு செலுத்தி இறுதியில் ஈச்வரனை அடைய முடியும். ஈ. இத்தகைய ஜீவன் நிஷ்காம கர்மயோகி யாகிறான். (கர்மயோகம் பயிலும் தன்னல மற்ற ஜீவன்) குருக்ருபாயோகப்படியான ஸாதனைஎன்ற ஸாதனா மார்க்கத்தில் இவ்விஷயம் சொல்லப் பட்டிருக்கிறது. அதனால் இந்த வழிப்படி ஸாதனை செய்பவருக்கு, மற்ற வழிகளில் செய்-பவரைக் காட்டிலும் விரைவாக ஞானம் கிடைக் கிறது. அத்தகைய ஜீவனுக்கு விரைவான ஆன் மீக முன்னேற்றம் ஏற்படுகிறது. (ஸனாதன் ஸன்ஸ்தாவின் குருக்ருபாயோகப்படியான ஸாதனை இதனைக் கற்றுத் தருகிறது. இதைப் பற்றிய மேலும் விவரங்கள் ஸனாதனின் க்ரந்தத் தொகுப்பான குருக்ருபாயோகப்படியான ஸாதனையில் இடம் பெற்றுள்ளது.) ஸுஷும்னா நாடி செயல்பட ஆரம்பிக்கிறது கைகளை ஒன்றாக குவிக்கும் இந்த ப்ரம்ம முத்திரையால் உடலின் ஸுஷும்னா நாடி செயல்பட்டு, இரவு முழுவதும் தங்கியதால் உடலில் ஏற்பட்ட தமோகுணத் தன்மையை நீக்குகிறது: கைகளைக் குவித்து அதில் மனதைப் பதிய வைத்து ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி... ‘என்ற ஸ்லோகத்தை உச்சரிப்பதால் ப்ரம்மாண்டத்திலுள்ள தெய்வீக அதிர்வலைகள் கைகளை நோக்கி ஆகர்ஷிக்கப்படுகின்றன. இந்த அதிர்வலைகள் கைகளில் திரள்கின்றன. குவிந்த கைகளிலுள்ள வெற்றிடத்தில் ஆகாய தத்துவத்தை, வ்யாபகத்தன்மையை க்ரஹித்து அங்கேயே நிறையும்படி செய்கின்றன. கைகளைக் குவிப்பதால் ஏற்படும் ப்ரம்மமுத்திரையின் மூலம் ஸுஷும்னா நாடி செயல்பட ஆரம்பிக்கிறது. இந்த நாடி ஜீவனின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இரவு முழுவதும் தூங்கியதால் உடலில் தமோகுணம் சேர்ந்திருந்தால், செயல் பாட்டிலிருக்கும் ஸுஷும்னா நாடி அதை நீக்கு வதில் உதவுகிறது மற்ற பயன்கள் அ. ஜீவன் உள்முகமாதல், பகவானோடு உரையாடுதல் மற்றும் ஜீவனின் கஷ்டம் தரும் சக்தி ஆவரணம் தூர விலகுதல் : இரவு முழுவதும் உறங்குவதால் ஜீவனின் உடலில் அடர்த்தியான தமோகுண அதிர்வலைகள் நிர்மாணமாகின்றன. அதிகாலை எழுந்து கரதரிசனம் செய்து, ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி...’ ஸ்லோகத்தைச் சொல்வதால் ஜீவன் உள்முகமாகிறது. அதனால் அவரின் உடலிலுள்ள கஷ்டம் தரும் சக்தி ஆவரணம் தூர விலகி, பகவானோடு உரையாடுவது ஆரம்பமாகிறது. அன்று முழுவதும் அதே நிலையில் ஜீவனால் இருக்க முடிகிறது. ஆ. அதிகாலை எழுந்து கரதரிசனம் செய்து, ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி...’ ஸ்லோகத்தை சொல்வது என்பது நமக்குள் பகவானை தரிசிப்பதாகும் : ஹிந்து தர்மத்தில் ‘அயம் ஆத்மா ப்ரம்ம:’ என்பதன் மூலம் ஆத்மாவே ப்ரம்மம் என்பது கற்றுத் தரப்படுகிறது. ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி..’ என்ற ஸ்லோகம் இதற்கு உதாரணமாக விளங்குகிறது. அதனால் அதிகாலை எழுந்து கரதரிசனம் செய்து ஸ்லோகம் சொல்வதன் மூலம் நமக்குள்ளேயே ஈச்வர தரிசனத்தைப் பெற முடிகிறது. ஹிந்து தர்மம் வெளித் தூய்மையைக் காட்டிலும் ஆழ்மனத் தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இ. நம்மையறியாமல் நாம் அயோக்ய கர் மாக்களை செய்ய முற்படும்போது நம் ஆழ்மனம் அதை உணர்வித்து செய்யாமல் தடுக்கிறது : மனிதனின் கைகள் மூலமாக அநேக காரியங்கள் தினமும் நடக்கின்றன. இந்த யோக்ய அல்லது அயோக்ய கர்மாக்கள் ஜீவனின் பாவ-புண்ணியங்களை நிர்ணயிக்கின்றன. ஜீவன் அதிகாலை எழுந்து கரதரிசனம் செய்து, ‘கராக்ரே வஸதே லக்ஷ்மி..’ ஸ்லோகத்தை சொல்வ தால் தன்னையறியாமல் அயோக்ய கர்மாக் களைத் தான் செய்யும்போது ஆழ்மனம் அதை உணர்வித்து செய்யாமல் தடுக்கிறது. ஈ. ஜீவனுள் இருக்கும் ஆன்மீக உணர்விற்கேற்ப கரங்களின் நுனிபாகத்தில் லக்ஷ்மி தத்துவ மும் மத்ய பாகத்தில் ஸரஸ்வதி தத்துவமும் அடி பாகத்தில் கோவிந்த தத்துவமும் ஆகர்ஷிக்கப்படுகிறது. உ. இந்த ஸ்லோகம் ஸம்ஸ்க்ருத மொழியில் இருப்பதால், தேவமொழியான ஸம்ஸ் க்ருதத்தின் சைதன்யமும் அந்த ஜீவனுக்கு கிடைக்கிறது. - தகவல் - ஸனாதனின் கையேடு தொடர்பு : 09380949626
நிறம்