logo
home பலன்கள் மார்ச் 02, 2019
நட்சத்திரத்திற்குரிய சிவராத்திரி விரதமும் பலன்களும்
article image

நிறம்

அசுவினியும் சிவராத்திரியும்: இந்த நாளில் சிவராத்திரி பூஜை செய்தால்,அற்புதமான வேலை கிடைக்கும்; உங்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்கும். பரணியும் சிவராத்திரியும்: பெற்ற தாய்க்கு உத்தமமாய் கர்மம் செய்த பலன்களைக் கொடுக்கும்; கார்த்திகையும் சிவராத்திரியும்: முருகக் கடவுளுடன் சேர்ந்து ஈசனைக் கண்ட பலனைக் கொடுக்கும். ரோகிணியும் சிவராத்திரியும்: திருமாலே நமக்கு வெண்சாமரம் வீசுவார். மிருகசீரிடமும் சிவராத்திரியும்: பசுவிற்கு உணவு இட்ட பலன் கிட்டும்;கோ பூஜை செய்த பலன் கிட்டும். புனர்பூசமும் சிவராத்திரியும்: மறுபிறவி(புனர் ஜன்மம்) எடுத்த பலன் கிட்டும். பூசமும் சிவராத்திரியும்: ஈசன் அருகே இருக்கக் கூடிய அனுக்கிரகம் கிட்டும். ஆயில்யமும் சிவராத்திரியும்: எவ்வளவு வேதனைகள் ஏற்பட்டாலும்,அவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஈசனுக்கு திருப்பாதத் தொண்டு செய்யக் கூடிய மன நிலை கிட்டும். பூரமும் சிவராத்திரியும்: நோய்கள் அணுகாது. உத்திரமும் சிவராத்திரியும்: லோபியாக(கஞ்சனாக) இருந்தாலும்,சாந்த நிலை அடைவார். சித்திரையும் சிவராத்திரியும்: தேவப் பிறவி கிட்டும். பூராடமும் சிவராத்திரியும்: யாரோடும் தேவையில்லாமல் நட்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். சதயமும் சிவராத்திரியும்: சாத்திரமாய் இருப்பார். பூரட்டாதியும் சிவராத்திரியும்: தேவர்களே வணங்குவர். உத்திரட்டாதியும் சிவராத்திரியும்: கர்ப்பவாசத்தில் உழல மாட்டார்கள். ரேவதியும் சிவராத்திரியும்: இனி பிறவியே எடுக்க மாட்டார்கள்.