logo
home பலன்கள் ஜூலை 17, 2024
2024 ஆடி மாத நற்பலன்கள்
article image

நிறம்

  • ஆன்மீக வழிபாட்டிற்கு சிறந்த மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. 
  • ஆடி வெள்ளி தொடங்கி, ஆதி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம் என சிறப்பு வழிபாட்டு தினங்களை கொண்டது ஆடி மாதம். 
  • அம்மன், ஐயனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பணசாமி உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது இந்த மாதத்தில்தான்.
  • தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். 
  • வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. 
  • பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.
  • உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
  • ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. 
  • ஆடி மாதத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
  • ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். 
  • சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். 
  • இதேபோல் ஆடிப் பூரம் விழா கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 
  • தமிழகத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மிக அருமையாக கொண்டாடப்படும். 
  • ஆடி மாதத்தில் கோ தானம் செய்வதும் மற்றும் கோ மாதாவிற்கு உணவு அளிப்பதும் நம்மிடம் இருக்கும் அணைத்து விதமான தோஷங்களில் இருந்து நிவர்த்தி ஆகும்.

ஆடி மாதத்தின் பலன்கள்:


ஆடி மாதம் (ஜூலை - ஆகஸ்ட்) தமிழ் காலண்டரின் முக்கியமான மாதங்களில் ஒன்றாகும். இப்போது, ராசி வாரியாக ஆடி மாத பலன்களை பார்க்கலாம்:

மேஷம் (Aries):

காரியத்தில் முன்னேற்றம்: தொழிலில் தொடர்ந்து புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

ஆரோக்கியம்: ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

குடும்பம்: உறவுகள் சுமுகமாக இருக்கும்.

 

ரிஷபம் (Taurus):

நிதி: நிதானம் தேவை. செலவுகள் அதிகரிக்கலாம்.

உறவுகள்: குடும்ப உறவுகள் நல்ல முறையில் இருக்கும்.

பணியிடம்: தொழில் சார்ந்த வாழ்க்கையில் புதிய சாதனையைப் படைக்கலாம்.

 

மிதுனம் (Gemini):

வெற்றிகள்: உங்களின் தைரியம் அதிகரிக்கும் அதன் மூலம் வெற்றி கிட்டும்

தனம்:  பணம் விஷயத்தில் உற்சாகம் தரக்கூடிய மாதமாக அமையும் 

தொழில்  :  வியாபாரிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய மாதமாக அமையும். 

 

கடகம் (Cancer):

தொழில்: வேலை தேடுபவர்களுக்கு உரிய வாய்ப்புகள் அமையும். 

உறவுகள்:  நிதானம் தேவை

நிதி: பொருளாதார ரீதியாக முன்னேற்றம்.

 

சிம்மம் (Leo):

தொழில்: பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது.

உறவுகள்:  நிதானம் தேவை.

நிதி: நிதி நிலை முன்னேற்றம் அடையும்.

 

கன்னி (Virgo):

தொழில் : தொழிலில் புதிய வளர்ச்சிகள்.

நிதி : பண வரவு கணிசமாக உயரும் 

உறவுகள்:  சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம்.

 

துலாம் (Libra):

குடும்பம்: உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்

ஆரோக்கியம்: இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும்.  

நிதி: தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறைய நிலை இருக்கும். 

 

விருச்சிகம் (Scorpio):

தொழில்: புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். 

நிதி: உங்களின் பொருளாதார நிலையை முன்னேற்றம் அடையும்.

வெற்றி: உங்களின் தைரியத்தையும், பணத்தேவையையும் போட்டி செய்யும். வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். 

 

தனுசு (Sagittarius):

உறவுகள்: உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். 

ஆரோக்கியம்: உடல் நலம் பராமரிக்கவும்.

தொழில்: சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

 

மகரம் (Capricorn):

தொழில்: தொழிலில் பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். 

உறவுகள்: உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும் மற்றும் முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். 

நிதி: பணவரவு அதிகரிக்கும்.

 

கும்பம் (Aquarius):

ஆரோக்கியம்: ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

உறவுகள்: வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தொழில்: தொழிலில் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். 

 

மீனம் (Pisces):

நிதி: சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

உறவுகள்: சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  

ஆரோக்கியம்: ஆரோக்கியம் சீராக இருக்கும்

Dr Astro Acharya V.S.Hari Hara Sudan
CEO – Hitam Astro
www.hitamastro.com
Phone: 8925539937 / 8925539931 / 8248743293 / 8925539932