logo
home ஆன்மீகம் பிப்ரவரி 08, 2016
ஒரு நல்ல காரியம் ஆயிரம் நல்ல காரியங்கு சமம்: முன்னோர் மகிழும் தை அமாவாசை
article image

நிறம்

12 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய காலம் மகோதய புண்ணிய காலம். இந்த காலம் வரும் 8-02-2016 திங்கள் தை அமாவாசை அன்று காலை 08.00 முதல் 17.00 வரை உள்ளது. அந்த காலத்தில் ஆலய காலமான 08.00 முதல் 12.00வரை இறை சம்மந்தமாக ஒரு முறை செய்யும் காரியம் ஆயிரம் கோடிக்கு சமம் . எனவே, இறைவன் நாமம் சொல்லுதல் அர்ச்சனை அபிஷேகம் செய்து அநுட்டாணம் ஆன்மீக பயிற்சி செய்து பயன் பெறுங்கள் குழந்தைகளுக்கு, ஐந்தெழுத்து மந்திரத்தை எழுதவும் ,உச்சரிக்கவும் கற்றுக்கொடுப்பது சிறந்த முறை.12.00 முதல் 14.30 வரை பித்ருக்கள் காலம் முடிந்த பின் மீண்டும் இறை வேலை தொடரலாம். சோமவார அமாவாசை வ்யதீபாத யோகம் ஒன்று கூடி வருவது மஹோதய புண்ய காலமாகும் இதற்கு முன் 6-2-1989 ஆம் ஆண்டு இருபத்தேழு வருடங்களுக்கு முன் மஹோதய புண்ய காலம் ஏற்பட்டது இந்த மஹோதய புண்ய காலத்தில் சமுத்திரங்களில் புண்ணிய நீர்நிலைகளில் நீராவது பாவங்களை போக்கும் என்பது ஐதீகம் தை அமாவாசை திங்கட்கிழமை திருவோணம் நட்சத்திரம் நாராயண சந்திர பிம்பம் கூடிய அற்புதமான மஹோதய புண்ய காலத்தில் முன்னோர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு அன்று நன்கு விபரம் தெரிந்தவர்களிடம் கேட்டறிந்து வம்ச முன்னோர்களை பித்ருக்களை காருண்ய ஆத்மாக்களை வழிப்பட்டு ஆராதித்து திதி தர்ப்பணம் கொடுத்து அவர்களை இன்புற்று மகிழ்வித்து அவர்களின் புண்ணிய வாழ்த்துக்களால் ஆசிகளால் பல்வகை செல்வங்களை பெறலாம் . தை அம்வாசையில் கண்டிப்பாக திதி கொடுப்பது குடும்பத்திற் மிகுந்த பலனையும், நம்மை பிடித்துள்ள தீய சக்திகளை விரட்டியடிக்கும் சக்தி வாய்ந்தது இந்த தை அம்வாசை. தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்துவருவார்கள். பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும்,பசியோடும் வருவார்கள். நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருக்களின் ஆத்மா. அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. பிண்டம்தான் ஆத்ம ரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும் உணவாகும்... தை அமாவாசை அன்றுபித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்தால்,ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். தை அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள். பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும் கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள். அதுபோல பல வருடங்கள் பாடுபட்டுகுழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து இறைவனடி சென்றபிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்றஅவர்களுக்குரிய மரியாதையை சரியாக தந்தாக வேண்டும். அதைதான் பித்ரு கடன் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு, இந்த கடனை அடைக்காத பிள்ளைகளின் வாழ்க்கை கலங்கும். இதனால்பித்ரு கடன் பட்ட பிள்ளைகளின் நெஞ்சமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கலங்கும்படிஆகும். அதனால் கண்டிப்பாக பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான்நன்மைகள் வரும் என்று சிவபெருமானே ஸ்ரீஇராமரிடம் கூறி இருக்கிறார். ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம்செய்து பிதுர் பூஜை செய்தார். அப்போது, சிவபெருமான் ஸ்ரீஇராமரின் முன்தோன்றி, “முன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம் செய்ததால்அனைத்துபாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் உன்னை தேடி வரும்.” என்றார்.