
நிறம்
சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பதன் காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல…. ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் சிவன் இருக்கும் இடங்களில் சித்தர்கள் இருக்கிறார்கள்.