logo
home ஆன்மீகம் ஜூன் 13, 2016
சிவபெருமானுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களும் , அவற்றினால் கிடைக்கும் அரிய பயன்களும்
article image

நிறம்

கோவில்களில் நடைபெறும் அபிஷேகத்தை காண்பது என்பது மிகச்சிறந்த பலனை தரும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வரிசையில் முக்கியமாக சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளை காண்பவர்களுக்கு சிவ அருள் கிடைக்கும் என்று சித்தர்கள் பல்வேறு பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். 

அப்படி அபிஷேகம் செய்யும்போது சிவ பெருமானுக்கு உகந்த பொருட்களை வைத்து அபிஷேகம் செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும். அந்த வகையில் ஒவ்வொரு பொருளும் அந்த பொருளால் அபிஷேகம் செய்யும் போது கிடைக்கும் பலனையும் நமது ஆன்மிகமலர்.காம் வாசகர்கள் பயன்பெற விரிவாக தந்துள்ளதை படித்து மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்.

1. கந்த தைலம் - இன்பம்
2. மாப்பொடி - கடன் நீக்கம்
3. மஞ்சட்பொடி - அரசவசியம்
4. நெல்லிப்பருப்புப்பொடி - பிணிநீக்கம்
5. திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்
6. ரசபஞ்சாமிர்தம் - முக்தி
7. பழபஞ்சாமிர்தம் - முக்தி
8. பால் - ஆயுள் விருத்தி
9. பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம்
10. இளவெந்நீர் - முக்தி
11. தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
12. இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்
13. சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும்
14. கரும்புச்சாறு - ஆரோக்கியம்
15. தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
16. எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்
17. நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்
18. கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்
19. மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
20. அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்
21. வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
22. தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
23. பன்னீர் - குளிர்ச்சி தரும்
24. விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்
25. தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
26. ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
27. சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
28. கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
29. ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
30. புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
31. பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
32. குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
33. தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
34. சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும்
35. ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்


ஆகவே நாம் சிவாலயங்களுக்கு செல்லும் போது ,  இந்த அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்தும் , கண்ணார அபிஷேகத்தை பார்த்தும் , பிறந்த பிறவியின் பயனைப் பெறவும் ,  மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்.


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
 

 www. aanmeegamalar.com 


எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com