logo
home ஆன்மீகம் ஜனவரி 11, 2022
பிரதோஷத்தின் போது சிவனுக்கும் நந்திக்கும் கொடுக்கவேண்டிய பிரதோஷ அரிசி
article image

நிறம்

தோஷம் என்றால் தடை என்று பொருள். இத்தகைய தடைகளுக்கே பாபம் என்று பெயர். மனிதனின் தடைகளுக்கெல்லாம் மனிதனின் பாபமே காரணம்.

தண்ணீரினால் வருகின்ற தோஷத்திற்கு ஜலதோஷம் என்று பெயர். ஜலதோஷம் பிடித்த காலத்தில் மூக்கினால் மூச்சு விட முடியாது. இத்தடையை நீங்க மருந்து உண்ண வேண்டும். மனிதன் மூச்சு விடுகின்ற மொத்த காலம் மனிதனுக்கு அக்காலம் ஆண்டவன் அருளிய பொற்காலம்.

இதில் ஜலதோஷ காலம் பாப காலம். இது ஒழிய வேண்டும் என்பதே மனிதனின் நோக்கம். இதே போன்று பிரதோஷம் என்றால் பாபமான காலம் என்று பொருள்.

இப்படியே மஹா பிரதோஷம் என்றால் பஞ்ச மஹா பாபங்களை நிகழ்த்திய காலம் என்று பொருள். கொலை செய்தல், களவு செய்தல், பொய் சொல்லுதல், கற்பழித்தல், மது உண்ணுதல் இவைகளே ஐந்து பெரிய பாபங்கள்.

பிரதோஷம் என்றால் மனித சமுதாயம் செய்கின்ற பாவங்கள் என்றும், மஹாப்பிரதோஷம் என்றால் மனிதன் செய்கின்ற பெரிய பாபங்கள் என்றும் பெயர்.

இவைகளை மனிதன் எப்பொழுது எல்லாம் நிகழ்த்துகினறானோ அந்த நேரங்களுக்கெல்லாம் பாபமான காலம் என்று பெயர். காலமே மனிதனின் சிந்தனையைக் குறுக்கிடுகிறது.

முன்னேற்றத்தைக் குடுக்கிடாத காலத்திற்கே புண்ணியகாலம் என்று பெயர். அந்த நேரங்களில்தான் மனிதன் சிந்திப்பான் முன்னேறுவான். கடவுளை நினைப்பான். குறுக்கீடும் காலங்களை விலக்கிக் கொள்ளுங்கள். முன்னேற்றம் ஏற்படும்.

பிரதோஷகால பூஜையும், தரிசனமும் இதற்காகவே நிகழ்த்தப்படுகின்றன. பருவ காலம், மழைகாலம், வெயில்காலம் இதைப் போன்று நல்ல நினைவு என்ற புண்ணியமும், கெட்ட நினைவு என்ற பாபமும் மனிதனின் காலத்தையே குறுக்கிட்டு அவனை தீயவனாக ஆக்கிவிடுகிறது. இதை அறிந்து கொண்டான் சிவபெருமான். மனிதன்தான் செய்த தீமைகளை ஒப்புக்கொள்ள மாட்டான் திருந்த மாட்டான், இதுவும் ஆண்டவனுக்குத் தெரியும்.

மனிதனைத் தீயவனாக உலவ விடுவதில் என்ன லாபம்? அதனால் அனைவரையும், பிரதோஷ பூஜையை ஒப்புக் கொள்ளும்படியாகச் செய்து அக்காலத்தில் எவர் வந்து தன்னைப் பூஜித்து தரிசித்தாலும், புண்ணியம் என்றால் பாவம் தானாக மறையும், உடனே நல்லவை நடக்கும் முன்னேற்றம் என்றார் சிவன்.

அதற்காகப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிவரை ஒரு காலத்தைப் பாப காலமாக அறிவித்தான். அக்காலத்தில் கூத்தாடி மகிழ்ந்தான். அப்பிரதோஷ காலம் தனக்கே உரியது என்றார் சிவன்.

இந்த மாலை வேளையில் வலிமையுள்ள நந்தியே இப் பூஜையைச் செய்கிறார். பாவ மில்லாதவரே ஆவார்.

உலகில் நந்தியின் வடி வம் காளைமாடு, பசுமாடு இவை மிகப் பெரிய சாதுக்களே, பாபிகளல்ல, புண் ணிய ஜீவன்களான இவை பிரதோஷத்தில் ஆண்டவனை பூஜிக் கின்றன. அதனால் அப்பொழுது இறைவன் அவைகளுக்கு நிறைய அருகம்புற்களை மேய்வதற்குத் தருகிறார்.

இதைக் கண்டு பக்தர்களும் அந்த பூஜையில் நந்தியின் முன்னும் இறைவனின் முன்னும் அருகம்புல்லைப் போட்டு வழிபடுதல் வேண்டும் செய்தால் மனிதனின் பாபம் தொலையும். ஆண்டவனும் மனிதனை சமுதாயத்தில் மேய அருளுவான்.

பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் பசு, காளை இவைகளுக்குப் புற்களை வழங்கி வழிபட்டால் புண்ணியம் வந்து சேரும், பாபம் தொலையும்.

பிரதோஷ நேரத்தில் நந்தி சிவபெருமானுக்கு ஒரு அன்புக் காணிக்கையைக் கொடுத்தார். அது நெய் கலந்த ஒரு பிடி பச்சை அரிசியே இதை சிவபெருமானும் உண்டார். நந்தியும் உண்டார். ஊர்ப் பாபத்தை மனிதனின் பாபத்தை ஏற்று அவர்களின் பாபம் இவ் அரிசியை உண்டதனால் தொலைந்தது. வாய் நாற்றமெடுப்பது சமைத்த உணவினால்தான், வாய் நாறும் போது பச்சரிசி யைப் போட்டு மென்றால்வாய் நாற்றம் உடனே ஒழியும். இதைப் போன்று பிரதோஷ தரிசனம் செய்து பிரதோஷ அரிசியை உண்டால் மனிதனுக்கு நல்வாக்கு பிறக்கும் அறிவு மலரும்.