logo
home பலன்கள் ஏப்ரல் 07, 2016
இலட்சம் உரு ஏற்றினால் எந்த மந்திரமும் சித்தியாகும், விரிவான விளக்கம் இதோ...
article image

நிறம்

வசியம் வேண்டுபவர்கள் அகத்தியர் வாத சௌமிய சாகரத்தில் மந்திவாள் பகுதியில் குறிப்பிட்டுள்ள " ஓம் ரீங் வசி வசி" என்னும் மந்திரத்தை கண்களை முடி,உதடு அசையாமல் காலையிலும் மாலையிலும் வடகிழக்கு திசையை நோக்கி 108 முறை ஜெபிக்கவேண்டும். தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள் ஜெபித்தால் சர்வ வசியம் உண்டாகும். தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மன ஒருமைபாட்டுடன் அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.பொதுவாக எல்லா மந்திரங்களும் ஜெபித்தஉடனேயே பலன் தருவதில்லை ஒரு லட்சம் முறை உரு ஏற்றிய பின்னரே அவை வேலை செய்யத் தொடங்கும். மேலும் வசிய மந்திரத்தை ஜெபிக்கும்போது வாயின் வலது பக்கத்தில் ஒரு கிராம்பினை ஒதுக்கி வைத்துகொள்ள வேண்டும்.ஆனால் எக்காரணம் கொண்டும் கடிக்கக்கூடாது. ஜெபம் முடிந்ததும் கிராம்பைத் துப்பிவிட வேண்டும்.இது வசிய சக்தியை விரைவு படுத்த உதவும். வசியப் பிரயோகம் செய்தால் கண்னுக்குத் தெரிந்த எதிரிகளும் தெரியாத எதிரிகளும் வசியமாகி விடுவார்கள். எதிரிகளின் எதிர்ப்பு அலைகளை மாற்ற நம் வசீகர சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எந்த மந்திரமானாலும் எடுத்த உடனேயே பலனைத்தராது. மிகவும் கவனத்துடன் மந்திரத்தின் ஒலி மாறாமல் சிந்தனையை மந்திரத்தில் மட்டும் செலுத்தி இலட்சம் உரு ஏற்றினால் மந்திரம் சித்தியாகும்.