logo
home பலன்கள் ஏப்ரல் 26, 2016
அனைவரும் அணியக்கூடிய, உருத்திரனின் அம்சமான உருத்திராட்சமும் அதை அணிபவருக்கு ஏற்படும் பலன்களும், உருத்திராட்ச முகத்தின் பலன்களும்
article image

நிறம்

சிவபெரு மானின் நெற்றிக்கண்ணில் இருந்து வீழ்ந்த விழிநீரின் அருள் வடிவமாகக் குறிப்பிடப்படுகிறது. மாமரத்தின் இலைகளைப் போன்று உள்ள ஒரு வகை மரத்தின், பசுமை கலந்த நீல நிறம் கொண்ட பழங்களின் உள்ளேயுள்ள விதைகளே உருத்திராட்சமாகும். இந்திய நாட்டில் வங்காளக் காடுகள், அசாம் காடுகள், நேபாள நாட்டிலும் , மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மைசூர் காடுகள், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் உருத்திராட்சம் கிடைக்கிறது. இவை வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நான்கு வண்ணங்களில் இருந்தாலும், நாம் பரவலாகப் பார்க்கும் பழுப்பு நிறமானவையே (கருப்பின் மங்கிய வடிவம்) அதிகமாகக் கிடைக்கின்றன. ருத்ராட்சம் அணிவதாயின் முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும். பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது. உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். ஒரு மரத்தின் விதை வடிவம் என்பதையும் தாண்டி, அதில் பலவித சூட்சுமமான தெய்வீக சக்திகள் உள்ளன என்பதை பலர் தமது சுய அனுபவங்களிலும், பலர் தமது அறிவியல்பூர்வமான ஆய்வுகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்கள். உருத்திராட்சத்தின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொருவிதமான பயனைத் தரத்தக்க சக்திநிலை வெளிப்பாடுகள் உள்ளன. (ஏக)முகம் எனப்படும் ஒரு முக உருத்திராட்சம் மிகவும் அரிதான ஒன்றாகும். அது பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடிய, விலை மதிக்கமுடியாத ஒன்றாகக் கூறப்படுகிறது. சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய தன்மை பெற்றிருப்பது இந்த ஏக (ஒரு)முக உருத்திராட்சம். இரு முகங்களைக் கொண்ட, கௌரி சங்கர் என அழைக்கப்படும் உருத்திராட்சம் அர்த்தநாதீச்சுரருக்கு உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவு முறைகளுக்குள் நல்ல, சுமூகமான போக்கு நிலவும். இது நவக் கிரகங்களில் சந்திரனுக்கு உரியதாகும். பலன்: மனம் எப்பொழுதும் சீரான நிலையிலிருக்கவும் மற்றவர்களோடு பழகும் தன்மையில் மேம்பட்டிருக்க வேண்டுமாயின் சந்திரனின் பலம் அவசியமாகிறது. மேலும் நமது உடலில் உள்ள நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதில் இருமுக உருத்திராட்சம் சிறப்பு வாய்ந்தது. மூன்று முகங்களைக்கொண்ட (திரிமுக )உருத்திராட்சம், அக்னி அம்சம் பெற்றது. நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரியது. விளையாட்டுத் துறையில் வெற்றிகளைக் குவிக்க விரும்புவோர் மும்முக உருத்திராட்சத்தை அணியலாம். இது மனதில் தைரியத்தையும், துணிவையும், தருவதோடு உடலியக்கங்களின் துடிப்பான செயல்திறனையும் மேம்படுத்தும். பலன்: தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள் ஆகியோரது சுய வளர்ச்சியையும் உயர்த்தும். சுறுசுறுப்பு குறைந்தவர்களும் இதையணிந்து பயன் பெறலாம். நான்கு முகங்களைக் கொண்ட (சதுர்முக )உருத்திராட்சம், விறும்மாவின் (பிரம்மா)அம்சம் கொண்டது. நவக்கிரகங்களில் புதனுடைய அம்சத்தைப் பெற்றது. இதையணிவதால் சுவாசக் கோளாறுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். திக்குவாய் உள்ளவர்கள் நான்கு முக உருத்திராட்சத்தை அணிவதால், அவர்களது பேச்சுத்திறன் நிச்சயம் மேன்படும். பலன்: கணினிப்பொறித்துறையினர், மின்னியல் கருவிகள் சம்பந்தமான தொழில், அறிவியல் ஆய்வு சம்பந்தமான துறை, ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்போர் இதை அணிவதால் நற்பலன்களைப் பெறலாம். பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக (ஐந்து முகம்) உருத்திராட்சம், சிவ அம்சம் பொருந்தியது. நவக்கிரகங்களில் குரு பகவானின் அம்சம் பெற்றதோடு, ஆழ்ந்த கல்வியறிவையும், மனதின் சமநிலையையும் தரும் தன்மையைப் கொண்டது. பலன்: ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் மருத்துவ குணம், ரத்த அழுத்தம் சம்பந்தமான உடற்பிணிகளையும் நீக்கக்கூடிய தன்மையையும் பெற்றதாக இந்த உருத்திராட்சம் விளங்குகிறது. நம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசம் போன்று அமைந்து காப்பாற்றக்கூடியது. சண்முக உருத்திராட்சம் எனப்படும் ஆறுமுகம் கொண்ட உருத்திராட்சம் கந்தக்கடவுளின் அம்சம் பொருந்தியது. நவக்கிரகங்களில் சுக்ரனின் அம்சம் பெற்றது. கலியுகம் சார்ந்த உலக வாழ்க்கை நலன்களைத்தரும் வல்லமை கொண்டது. உடலில் ஜனனேந்திரியங்களின் செயல்பாட்டில் சம நிலையை உண்டாக்கி மனதின் ஈர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடியது. பலன்: இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான போக்கு நிலவச் செய்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. வெகுசனத் தொடர்பு சாதனங்களில், தொழில் ரீதியாக சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இதை அணிந்து சனவசிய சக்தியைப் பெற்று நல்ல பலன்களை அடையலாம். சப்தமுக (ஏழு முகம்) உருத்திராட்சம் இலக்குமியின் மங்கள அம்சத்தைக்கொண்டது. நவக்கிரகங்களில் சனிபகவானுடைய சுப அம்சம் பொருந்தியது. அதாவது, சனி பகவானின் அலை வீச்சை சாதகமாகவும், நன்மைகள் தரும் விதமாகவும் மாற்றியமைக்கக் கூடியது. பலன்: நுரையீரல் சம்பந்தமான பல கோளாறுகள் சரியாகவும், வறுமைத்துயர் நீங்கி வளமான வாழ்வை ஒருவர் பெறவும் இந்த உருத்திராட்ச மணி பெரும் துணை புரியக்கூடியது. ஏழரைச்சனியின் காலம், அட்டமச் சனியின் காலம், கண்டச்சனியின் காலம், சனி திசையின் காலம் ஆகிய சனிக்கிரகத் தொல்லைகளில் இருந்து விடுபட இந்த சப்தமுக உருதிய்ராட்சம் பெரும் துணை புரியும். இந்த வகை மணிகளை உடலில் அணிவதைவிட பூசையறையில் வைத்துத் தினமும் பூசிப்பதே நல்லது. நீண்ட காலமாகத் தொல்லை தந்துவரும் நோய் நொடிகளைத் தீர்க்க, இந்த மணியை முறையாகப் பயன் படுத்துவதன் மூலமாக பலன்களை நிச்சயம் அடையலாம். விநாயகப் பெருமானின் அம்சம் கொண்ட அட்டமுக உருத்திராட்சமானது எண்முக மணியாகும். நவக்கிரகங்களில் இது ராகுவின் அலைவீச்சைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமையான, அலையியக்கக் காந்த மண்டல சுழற்சியினை உடையது. பலன்: உருத்திராட்சங்களிலேயே மிக, மிகக் கவனமாகச் சோதனை செய்த பின்பே இதை வீட்டில் வைத்துப் பூசை செய்ய வேண்டும். உடலில் அணிவது பெரும்பாலும், இந்த மணியின் விடயத்தில் தவிர்க்கப்படுகிறது. உளவியல் சிக்கல்களுக்குட்பட்டவர்களின் மனநலம் மேம்பட ஒரு குறிப்பிட்ட கால அளவிலும், ஒரு குறிப்பிட்ட முறையிலும் இதை பூசை செய்து வருவது மிக, மிக நல்லதாகும். இந்த மணிகள் வாழ்வியலின் நூதனமான அனுபவங்களைத் தந்து, மனோரீதியான தனிப்பட்ட விளைவுகளால், ஒருவரை அறிவியலின் அடிப்படைகளுக்குட்படாத புதிரான விளைவுகளுக்கு உள்ளாக்கக்கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப் பெற்றவையாகும். அன்னை பராசக்தியின் அம்சம் கொண்டது நவமுக (ஒன்பது முகம்) உருத்திராட்சம். நவக்கிரகங்களில் கேதுவுக்குரியது. பலன்: இதைப் பெரும்பாலும் சாக்த முறையிலான சக்தி சாதனையின் நெறி நிற்போர்( மாந்திரீகர்) தமது சாதனையின் பூர்த்திக்காக விரும்பி அணிவர். இதை அணிந்தால் பொறுமையும், நிதானமும் மனதில் நிலைத்து நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். மேலும், பிற மொழிகளில் நிபுணத்துவம் பெறவும், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கும் இந்த மணி பெரிதும் உறுதுணை புரிகிறது. கேது கிரகத்தின் கெடுபலன்களான கீழே விழுந்து அடிபடுதல், கடும் எதிர்மறை எண்ணங்கள், கெட்ட கனவுகள், புரியாத உடல் நிலைக் கோளாறுகள் ஆகிய சங்கடங்களைச் சரியாக்கும் தன்மையை உடையது இந்த உருத்திராட்சம். தசமுக உருத்திராட்சமானது விட்டுணுவின் அம் சம் பொருந்தியது. தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. இம்மணி விட்டுணுவின் திருவருளை ஒருங்கே பெற்றுத்தருவதாக நம்பிக்கை. ஏகாதச உருத்திராட்சமானது பதினோரு முகங்களைக் கொண்டதாகும். பலன்: உருத்திர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் பெற்ற இந்த மணி, மனதின் ஆற்றலைப் பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரிய விரதத்தில் நிலைபெற விரும்புவோர் இதனையணிந்து நற்பயன் பெறலாம். துவாதச உருத்திராட்சம் எனப்படும் பன்னிருமுக உருத்திராட்சம், சூரிய பகவானின் திருவருளைப் பெற்றுத்தரக்கூடியது. பலன்: அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்நோக்குபவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புவோர், ஆன்மிக பலம் வேண்டுவோர் இம்மணியை அணியலாம். இதை விட அதிகமான முகங்கள் உண்டு அவை அத்க அளவிலான அதிர்வலைகளை வெளிப்படுத்துவதால் அணிபவைக்கு உகந்தது அல்ல என சான்றோர்கள் கூறுகின்றார்கள்.மற்றும் உருத்திராட்சம் அணிவதற்க்கு உணவோ பாலினமோ வயதோ இல்லை எனவும் கூறுகின்றார்கள். உருத்திராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் உருத்திராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது என்று சொல்கிறார்கள். அதனால் தான் உருத்திராட்சத்தின் இரு பக்கத்திலும் பூண் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள். - சிவன் சித்தர் (முகநூல் நண்பர்) குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com