logo
home பலன்கள் ஜூன் 20, 2016
வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் மூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும்
article image

நிறம்

வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்குமத்தியில் வாக்குவாதங்கள்,திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும்உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது  சாம்பிராணி தூபம். பொருட்கள் 

1. வெண்கடுகு 250 கிராம
2. நாய்க்கடுகு 250 கிராம
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்

ஆகியவற்றை பொடியாக செய்து வீட்டில் தூபம் போட்டு வந்தால் மேற்கண்ட எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், திருஷ்டி போன்றவை எளிதாக மறைந்து விடும். மேற்கண்ட பொருட்களுக்குரிய தெய்வங்கள்

வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. 
மருதாணி விதை திருமகளுக்குரியது. 
அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். 
வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது. 

மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்களுக்கு உரியது எனவே வீட்டில் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வந்தால் தெய்வ கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.

அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அனைத்தையும் பொடித்து சிறுது சம்பிராணியுடன் தூபம் தினசரி தொடர்ந்து 45 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும். மேற்கண்ட பொடியோ பொருட்களோ கால்களில் பட கூடாது. 

- baskaran sankar


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 


தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
           
  

www. aanmeegamalar.com 


எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com