logo
home பலன்கள் ஜூலை 29, 2017
ஆன்மிக பாதையில் செல்ல உதவும் அற்புதமான விருப்பங்கள்
article image

நிறம்

ஆன்மிக கண்ணோட்டத்தில் நம்முடைய விருப்பம், அடுத்தவர்கள் விருப்பம், கடவுளின் விருப்பம் ஆகியவற்றை பற்றிய விளக்கம் பொருள் விளக்கம் இச்சா என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில், விருப்பம் என்று அர்த்தம். அது போல, ஸ்வேச்சா: ‘ஸ்வ’ என்றால் நான் அல்லது என்னுடையது என்று அர்த்தம். ஒருவர் ஸ்வேச்சா நிலையில் இருக்கும் போது, நடப்பது எல்லாம் தன்னுடைய விருப்பப்படி நடக்க வேண்டும் என எண்ணுவார். பரேச்சா: ‘பர’ என்றால் அடுத்தவர் என்று அர்த்தம். ஒருவர் பரேச்சா நிலையில் இருக்கும் போது நடப்பது எல்லாம் அடுத்தவர் விருப்பப்படி நடக்க வேண்டும் என எண்ணுவார். ஈஸ்வர்இச்சா: ‘ஈஸ்வர்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். ஒருவர் ஈஸ்வர்இச்சா நிலையில் இருக்கும் போது, நடப்பது எல்லாம் கடவுளின் விருப்பம் என்று எண்ணுவார். ஆன்மீக பயிற்சி மற்றும் வளர்ச்சியில் நம் முடைய விருப்பம், அடுத்தவர்கள் விருப்பம், கடவு ளின் விருப்பம் ஆகியவற்றை பற்றிய விளக்கம் : நாம் எல்லோரும் நம்மை நம் உடல் (ஐம் புலன்கள்), மனம் மற்றும் புத்தி கொண்டே அறி கின்றோம். இதை நம்முடைய அகங்காரம் என்றும் சொல்லலாம். ஆனால் நம்முடைய உண்மையான சுபாவம் என்பது நம் ஆன்மா அல்லது நம்முள் இருக்கும் இறை தத்துவம் என்று ஆன்மீகம் நமக்கு கற்றுத் தருகிறது. ஆன்மாவின் இயல்பு பேரானந்தத்தில் இருப்பது அதாவது ஆன்மா என்பது நம்மை உச்சக் கட்ட பரமானந்த நிலையை அடைய ஊக்கம் அளிக்கக்கூடியது, ஆன்மீக பாதையின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் - நம் உடல் (ஐம்புலன்கள்), மனம் மற்றும் புத்தி யுடன் தொடர்புடைய நம்முடைய அடையாளத்தை குறைத்து பின் இறுதியில் கரைப்பது. நம்முள் இருக்கும் இறை தத்துவத்தை அடையாளம் கண்டு பின் அனுபவிப்பது. ஆன்மீக பயிற்சியின் பகுதியாக நம்முடைய விருப்பத்திலிருந்து அடுத்தவர்களின் விருப்பம் பிறகு இறுதியில் கடவுளின் விருப்பம் என்று முன்னேறுவதே இதை அடைய ஒரு வழி. நாம் செய்யும் எல்லா செயல்களும் நம் ஐம்புலன்கள்,மனம்,புத்தி இவை கொண்டு நமக்கு எப்படி தேவையோ அப்படி செய்கின்றோம். இது போல் ஆசைகலை கைவிட முடியாமல் அவற்றின் பின்னே சென்றோமானால் நாம் யார் என்று தெரியாமலும் நம் ஆன்மாவை அனுபவிக்க முடியாமலும் தவறி விடுவோம். இவ்வாறு நம் விருப்பம் போல் வாழ்வது என்பது மிருகங்களை போல் வாழ்வதற்கு சமம்; அடுத்தவர்களைப்பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. நமது ஆன்மீக பாதையில் எல்லோரும் சொல்வது போல் நமது விருப்பத்தை அலட்சியப் படுத்தினாலே அதனுடைய தாக்கம் குறையும், அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு அதன்படி நடந்தால் நாம் நமது விருப்பத்தை தானாகவே குறைத்தும் தவிர்த்தும் விடுவோம் , நமது பழக்கத்தை அடுத்தவர்கள் விருப்பம் போல் நடக்க பழகி கொண்டால், நமக்குள் இருக்கும் நமது அகங்காரம் குறைந்து விடும்(அதாவது நம் ஐம்புலன்கள்,மனம், புத்தி) அடுத்தவர்கள் விருப்பம் பற்றி நினைக்கும் ஒருவரின் உதாரணத்தை பார்ப்போம்: ராமுவும், நிர்மலாவும் தம்பதியர்கள், ஒர் வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் வெவ் வேறு விஷயங்கள் செய்ய விருப்பம் இருந்தது. நிர்மலாவுக்கு இசைக் கச்சேரிக்கும், ராமுவுக்கு கால்பந்து விளையாட செல்லவும் ஆசை இருந் தது. ஆன்மீக பாதையில் இருக்கும் ராமுவுக்கு அடுத்தவர்கள் விருப்பத்திற்கு மதிப்பு தருவதுப் பற்றி தெரியும், அதனால் ராமு தனக்கு பிடித்த கால்பந்து விளையாட்டை தவிர்த்து நிர்மலாவுடன் இசை கச்சேரிக்கு சென்றான். இத்தகைய நடத்தையால் ராமு ஆன்மீக பாதையில் முன்னேறுகிறான். ஏனெனில் அவன் தன்னோட ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியால் எழும் தன் சொந்த விருப்பத்தை இந்நிகழ்வில் தவிர்த்தான். உண்மையாக ஆன்மீகம் பின்பற்றுவது என்பது அடுத்தவர்கள் விருப்பம் தான் தன் விருப்பம் என்று நினைத்து தன்னை மாற்றி கொள்வது. முறைப்படி தொடர்ந்து ஆன்மீக பயிற்சியை அதிகரிப்பதோடு அடுத்தவர்கள் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்கும் போது, நம் ஐம்புலன்கள், மனம், புத்தியுடன் தொடர்புள்ள நம் அடையாளம் நாளடைவில் கரைந்துவிடும். இத்தறுவாயில் வெளிப்பட்ட ரூபத்தில் குரு நம் வாழ்வில் வரு வார். குருவுக்கு விஸ்வ மனம் மற்றும் விஸ்வ புத்தியை அணுகி இறைவனின் விருப்பப்படி செயல் ஆற்ற முடியும். அவர் சொல்வதை கேட்டு அவர் அறிவுறுத்தல் படி செயல்பட்டால் அது ஒரு வன் கடவுளின் விருப்பம் போல் நடப்பதாகும். ஒருவனின் அகங் காரம் தேவையான அளவு கரைந்தபின் (அதாவது ஒரு மகானின் நிலை) அவன் நேரடியாக விஸ்வ மனம் மற்றும் விஸ்வ புத்தியை அணுக முடியும். பின் நேரடியாக இறைவனின் விருப்பப்படி செயல் ஆற்ற முடியும். இறைவனின் விருப்பம் போல் நடப்பதால் நம் முள்இறைவனை உணரமுடியும். அடிக்கடி இக்கருத்தை பற்றி கேட்கப்படும் கேள்விகள் அடுத்தவர்கள் விருப்பத்திற்கு நாம் எவ்வளவு தூரம் மதிப்பு கொடுத்து நடப்பது?யாராவது நம்மை தவறான விஷயத்தை செய்ய சொன்னால், அவர்கள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பதா? அல்லது நம் சுய புத்திக் கொண்டு இல்லை என்று சொல்வதா? பதில்: அடுத்தவர்கள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பது என்பது நம் ஆன்மீக பயணத்திற்கு அது தடங்கல் ஏற்படுத்தும் என்றால் அடுத்தவர்கள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க தேவையில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வது 50% சரியாகவும் 50% தவறாகவும் இருந்தால் அடுத் தவர்கள் விருப்பம் போல் நடப்பதில் தவறில்லை. ஆன்மீக கண்ணோட்டத்தில் அடுத்தவர்கள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து நடப்பதன் நோக்கம் நான் என்ற அகங்காரம் குறைய வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நோக்கம் உலக வாழ்க்கை கண்ணோட்டத்தில் அல்ல. அடுத்தவர்கள் விருப்பம் போல் நடப்பது வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமா? அல்லது வெளி நபர்களிடமும் அதே போல் நடந்து கொள்ள வேண்டுமா? பதில் : நமது ஆன்மீக பாதையில் தடங்கல் ஏற்படாதவரை சந்தர்ப்பம் கிடைக்கும் போது அடுத்தவர்கள் விருப்பம் போல் நடக்க வேண்டும் உதாரணத்திற்கு, யாராவது நம்மிடம் வந்து அவர்கள் விருப்பம் போல் தினமும் சினிமாவிற்கு செல்ல சொன்னால் நாம் நம்மை கட்டுப்படுத்தி தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் தினமும் சினிமாவிற்கு செல்வது என்பது நடைமுறை வாழ்க்கைக்கும் ஆன்மீக பாதைக்கும் ஒத்து வராது. ஆனால் நமது நண்பர் எப்பொழுதாவது நம்மை சினிமாவிற்கு கூப்பிட்டால் அது நம் நேரத்தை விரயம் செய்தாலும் நாம் செல்ல வேண்டும் ஏனென்றால் நாம் அடுத்தவர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நம்மை கட்டுப்படுத்தியும் கோபத்தை அடக்கியும் அடுத் தவர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தால் என்ன நடக்கும்? அடுத்தவர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்ப தால் உள்ள ஆன்மீக பயன்களை, ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் அறிவு பூர்வமாக உணர்ந்து இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப எதிர்ப்பும் எதிர்மறை எண் ணங்களும் தோன்றும். இதை வெல்ல ஒருவர் சுய ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: www.ssrf.org தொடர்பு: 9380949626 குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.