logo
home பலன்கள் மே 12, 2018
வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர, அவசியம் செய்ய வேண்டிய செயல்கள்
article image

நிறம்

உங்கள் வாழ்க்கையில், நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? வாஸ்து ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது... வாஸ்து விதிகள் விளக்கம். நமது வீடு வாரம் ஒரு முறை உப்புத்தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். வீட்டின் கீழ் நிலை, மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் 90 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்யப்பட வேண்டும். நமது வீட்டிற்கு எதிரில் குப்பைத் தொட்டி இருக்கக் கூடாது. நமது வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் வீட்டின் வெளிப்புறங்களில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குப்பை கூளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பீரோ உள்ளே மஞ்சள் துண்டு வைத்து பணம் நகை வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியம் நமது செல்வநிலை உயர்வதற்கு. நமது வீட்டின் அருகில் காசாப்பு கடை இருந்தால் தவறு. பாறைகளின் மேல் நமது வீட்டின் குடியிருப்பு கட்டிடம் இருக்கக் கூடாது. ஏரி குளங்களில் மனை அமைக்கக் கூடாது. கோயில் சொத்துக்கள், கோயில் இடங்கள், போன தலைமுறையில் மற்றும் முன் காலங்களில் அது கோயில் இடமாக இருந்தது என்று சொன்னால் அந்த இடங்களில் கட்டாயமாக குடியிருப்பு அமைக்கக் கூடாது. தார் சாலைக்கு தாழ்வாக உள்ள மனை வேண்டாம். வீட்டின் வடகிழக்கு பகுதியின் மீது மரங்கள், செடிகொடிகள், நிழல் விழக்கூடாது. வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள் என்று சொன்னால், அரசு, ஆல், புளி, நாவல், நெல்லி, எருக்கு, பனைமரங்கள், மூங்கில் மரங்கள், கற்றாளை, காட்டு மரங்கள், அசோக மரம், புங்கை, எலுமிச்சை, வில்வம், முள் உள்ள மரங்கள் மற்றும் செடிகள் ஆகியன வேண்டாம். ஏரி, குளம், ஆறு, கால்வாய் ஆகியவை ஓரிரு வீதிகள் தள்ளி நமது இல்லம் அமைய வேண்டும். துளசிமாடம் தென்கிழக்கு வடமேற்கு மட்டுமே அமைய வேண்டும். வீட்டின் பிரமஸ்தானம் மிக மிக முக்கியம். அந்த இடத்தை மிகவும் சர்வ ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த இடத்தில் கட்டாயம் வாஸ்து நிபுணர் அவசியம் தேவை. பூஜை அறையின் கதவில் மணி வேண்டாம். வீட்டிற்குள் மிதியடிகள் போட்டு நடக்கக்கூடாது. கண்ணாடி மணிகள் (Crystal) வீட்டின் முன்பு தொங்க விடுவது தவறு. பறவைகளை கூண்டில் வைத்து வளர்ப்பது தவறு. மந்திர தந்திரம் தெரிந்தவர் நமது வீட்டில் அனுமதிப்பது தவறு. சன்னியாசிகள் ஓரிரு நாள் தங்குவது தவறில்லை. எப்பொழுதும் நமது வீட்டில் தங்க வைப்பது தவறு. எந்த அறையும் இருட்டாக இருப்பது தவறு. வீட்டின் மாடிப்படிகள் முதலில் கிழக்கு, வடக்கு ஏறுவது தவறு. முன்னோர் படங்கள் வரவேற்பு அறையின் வடக்கு பார்த்து வைத்துக் கொள்ளலாம். கிரஹ பிரவேச நாள் அந்த வீட்டில் தங்க வேண்டும். ராஜநிலை தலைவாசலில் ஆனி, இரும்பு சம்மந்தப்பட்ட விஷயங்கள் வரக்கூடாது. வாஸ்து நிபுணர்களின் ஆலோசனை இந்த இடத்தில் கட்டாயம் வேண்டும். தலைவாசல் கதவு தேக்கு மரத்தில் அமைப்பது தேக்கம் என்று பொருள்படும். அதனால் தலைவாசலுக்கு தேக்கு மரம் தவிர்க்கப்பட வேண்டும். மற்ற அறைகளுக்கு அமைத்துக் கொள்ளலாம். கண்டிப்பாக தலைவாயில் மரம் நமது இந்திய மரமாக பலம் வாய்ந்த மரமாகவும், நமது செல்வ நிலையை உயர்த்தக் கூடிய மரமாகவும், எடை குறைந்த மரமாகவும் அமைய வேண்டும். நமது தலைவாயில் மரத்திற்கும், நமது முன்னோர்கள் பணம் வைக்கும் பெட்டி செய்த மரமும் ஒரே இனத்தைச் சேர்ந்ததுதான். இந்த இடத்தில் சரியான மரம் எது என்பதற்காக வாஸ்து நிபுணர் ஆலோசனை அவசியம். ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அந்த இல்லத்தில் ஜீவ காருண்யம் இருக்காது என்பது உண்மை. அதை வைத்து அந்த இல்லம் சரியான வாஸ்து அமைப்பில் இல்லை என்று உணரலாம். படுக்கை அறையில் கண்ணாடி உபயோகப்படுத்த வேண்டாம். அதற்கு ஒரு அறிவியல் காரணம் உண்டு. எக்காரணம் கொண்டும் ஒரு வீட்டின் ஒரு முனையை ஒடித்து கட்டிடம் கட்ட வேண்டாம். ஏன் என்று சொன்னால் ஒவ்வொரு முனையும் நமது வீட்டின் உள்ளவர்களுடன் தொடர்புள்ளது. வீடு கட்டும் பொறியாளர்களுக்கும், கட்டிட வரைபட அமைப்பாளர்களுக்கும் வாஸ்து தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் குடியிருக்கும் நபர்களுக்கு வாஸ்து மிகவும் முக்கியம். நமது வடக்கு கிழக்கும் நமது வாய் மற்றும் மூக்கிற்கு இணையானது. இது எப்பொழுதும் போதுமான அளவு திறந்திருக்க வேண்டும். எப்பொழுதும் திறந்திருக்க வேண்டும். அது போல வடக்கும் கிழக்கும் சகல செல்வங்களும் வரும் வழியாகும். அங்கு அடைப்புக்கள் இருந்தால் உடைத்து எரியுங்கள். தெற்கும் மேற்கும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க உதவும் வழிகள் போன்றது. தேவையில்லாமல் அதிக திறப்புக்கள் இருக்கக் கூடாது. தேவையில்லாமல் திறந்து வைக்கக் கூடாது. தெற்கும் மேற்கும் வேண்டாத விசயங்கள் வரும்வழி, திறந்திருந்தால் உடனடியாக மூடி வையுங்கள். அதிகமாக திறந்தால் அது ஆபத்து. ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம் போன்: 08526223399 / 09843096462