logo
home பலன்கள் நவம்பர் 09, 2019
126 ஆண்டுக்குப் பின் வரும் சனி மகா பிரதோஷம்
article image

நிறம்

பொதுவாக சனி பிரதோஷம் என்றாலே மிகச் சிறந்த சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும். அதுவும் குருபெயர்ச்சி, நரகாசுர வதம், சூரபத்ம வதம் போன்றவை முடிந்த பின்பு வரும் இந்த சனிப்பிரதோஷம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாகும். இதுபோன்ற அரிய பிரதோஷம் 126 ஆண்டுகளுக்கு பின் தற்போது 9.11.2019 அன்று வருவதை அனேக சிவாலயங்களில் சிறப்பு வழிபாடா கொண்டாடப்படுகிறது. மாதம் தோறும் திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். சிவபெருமான் ஆறுகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை என்பதால் இந்த சனி பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகிறது. இந்த பிரதோஷத்தில் ஈசனையும், சனீஸ்வரனையும் சேர்த்து வழிபடுவதால் இந்த பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு. ஒரு சனிப்பிரதோஷ விரதமானது, ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்திற்கு சமம் என்பது தான் ஆன்மிக நம்பிக்கை. இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவனுக்கும் விளக்கேற்றி வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும். நந்திக்கும் சிவனுக்கும் திராட்சை மாலை வில்வ மாலை அணிவிப்பது இன்னும் சிறந்தது. மகா பிரதோஷத்தில் ஈசனை வழிபடும்போது இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். சனி பிரதோஷத்தில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பயனை கொடுக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரதோஷத்தில் இன்னுமொரு சிறப்பாக அமைந்ததுதான் 9.11.2019 அன்று நடைபெறவிருக்கும் பிரதோஷம். 126 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சனி பிரதோஷம். குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ந்த(குரு பெயர்ச்சி)பின்பு வரும் முதல் பிரதோஷம் அதுவும் சனி பிரதோஷம். அதே போன்று கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த தினத்ததிற்கு (தீபாவளி) பிறகு வரும் பிரதோஷம் அதுவும் சனி பிரதோஷம். இவை மட்டுமின்றி முருகப்பெருமான் சூரனை வதம் செய்த(சூரசம்ஹாரம்)பிறகு வரும் சனி மகா பிரதோஷம். இவை அனைத்தும் 126 ஆண்டுகளுக்கு முன்பு சனி பிரதோஷம் ரேவதி நட்சத்திரத்தில் வந்தது. அந்த அறிய நிகழ்வு மீண்டும் தற்போது 09-11-2019 வந்துள்ளது. பலன்கள்: குரு பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி பிரதோஷம் என்பதால் குருவின் பார்வை 12ராசிக்கும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து ராசிகாரர்களும் சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தல் நன்மை தரும் திருமண தடை நீங்கும் கடன் சுமை அகலும் மாணவ மாணவிகளுக்கு கற்கும் ஆர்வமும் நியாபக திறனும் அதிகரிக்கும். இந்த மகத்துவமான சனி மகா பிரதோஷத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறையருள் பெற்றிடவும்