logo
home ஆன்மீகம் ஏப்ரல் 03, 2016
விஷேச நாட்களில் வீடுகளில் மாவிலை தோரணம் கட்டப்படுவதன் அறிவியல் பூர்வமான காரணம் என்ன?
article image

நிறம்

மாவிலை தோரணம் மங்களத்தின் சின்னம், சுப காரியத்தின் அடையாளம். மாவிலை தோரணத்தை காணும் போதே நம்மனதிற்குள் ஒரு அதீத சந்தோசம் எட்டிப்பார்பதை நம்மால் உணராமல் இருக்க முடியாது. பச்சை பசேலென்று மாவிலையை அழகாய் ஒவ்வொன்றாய் கோர்த்து அதை தோரணமாய் கட்டி நம் வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கபோவதை வாசலிலேயே அனைவருக்கும் அறிவிக்கும் ஒரு ஆனந்த அழைப்பிதழ். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாவிலை கட்டுவதன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா? பொதுவாகவே இலைகள் பகலில் பிராண வாயுவான ஆக்சிஜனை அதிக அளவில் வெளிடுவதையும் இரவில் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை வெளிடுவதையும் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இச்செயல் அவை மரத்திலோ அல்லது செடியிலோ உள்ளவரை மட்டும் தான். ஆனால் மாவிலைக்கு மட்டும் தான் அவை மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பிறகும் தன்னுள் அடக்கி இருக்கும் ஆக்சிஜனை வெளியிடும் குணம் இருக்கிறது. நம் வீட்டு விசேஷங்கள் யாவும் சுற்றமும் நட்பும் புடை சூழ நடதப்படுவாதால் கூட்டத்திற்கு குறைவிருக்காது. அந்த காலத்தில் பெரும்பாலும் இல்லங்களிலேயே விசேஷங்கள் நடத்தப்பட்டன. இக்காலத்தை போன்று அக்காலத்தில் சொந்த பந்தங்கள் சில நிமிடம் தலைகாட்டி செல்லும் கெட்ட பழக்கம் கடைபிடிக்காமல் நாள், பலநாட்கள், வாரம், என்று சொந்தங்களுக்கு ஏற்றவகையில் வீடுகளில் கூடுவார்கள். அவ்வாறு கூடுவதால் கூட்டம் அதிகமிருக்கும், அவர்கள் மூச்சிலிருந்து வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு போதுமான பிராண வாயு கிடைக்க சிரமமிருக்கும். இதை தவிர்ப்பதற்காகத்தான் அக்காலத்திலேயே நம் முன்னோர்கள் ஆக்சிஜனை வெளியிடும் ஆபத்பாந்தவனாகிய மாவிலையை தோரணங்களாக மக்கள் கூடும் இடங்களாகிய வீட்டு விசேஷங்களிலும், கோயில் திருவிழா போன்ற சுப நிகழ்சிகளின் போதும் கட்டும் வழக்கத்தை ஏற்படுத்தினர். - நன்றி: அர்த்தமுள்ள ஹிந்து மதம். எதையும் ஆராயாமல் செய்யவில்லை நம் முன்னோர்கள், நாம்தான் அவர்கள் வகுத்தவற்றை கேலி செய்து பல நல்ல விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.