
தமிழக சிவாலங்களில் முக்கியமானது சென்னையில் உள்ள திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆலயம், அது வால்மிகி முனிவர் வழிபட்ட இடம் அதனாலே வான்மிகியூர் என்றாகி வான்மியூர் என்றாயிற்று
இது சூரியன், பிரம்மா, காமதேனு என எல்லோரும் வணங்கிய தலம், அகத்தியர் முதல் ஏகப்பட்ட சித்தர்கள் வணங்கிய தலம், அகத்தியருக்கு அருள்காட்சி பல இங்கு கிடைத்தது
இப்படியான சிவதலத்தில் நால்வர்களும் பாடினார்கள், இன்னும் பல சிறப்புக்களை கொண்ட இந்த ஆலயத்தில்தான் அப்பையா தீட்சிதர்க்கு சிவபெருமான் முழுகோலம் காட்டினார்
அப்படியான தலத்தில் பல அற்புதங்கள் நடக்கும் அதில் ஒன்று அந்த ரிஷப தண்டம்
சிவனுக்கான செங்கோல் போல அமைந்திருக்கும் அந்த தண்டம் ரிஷபத்தை தலையில் கொண்டிருப்பது, இது அக்கோவிலின் அடையாளம் அங்கு கண்ணாடி பேழையில் வைத்திருப்பார்கள், சிறப்பு நாட்களில் அதை வெளியில் எடுத்து வருவார்கள்
இந்த தண்டம் ஆச்சரியமானது, அதாவது பண்டைய காலங்களில் திருவாசகம் ஓதும்போதும் தேவாரம் பாடப்படும் போதும் அது அந்தரத்தில் மிதக்கும், உலகுக்கு இது ஆச்சரியம் ஆனால் அக்கோவிலில் இது சாதாரணமாக நடைபெறும் வழக்கம்.
திருமுறைகள் ஓதப்படும் போது அந்த தண்டமும் கேட்கும் என்பதும், அரூபமாக் சிவன் அந்த தண்டத்தை பிடித்து நிற்கின்றார் என்பதும் அங்கு இயல்பான நிகழ்வு
ஆலயத்தின் இந்த சிலிர்க்க வைக்கும் காட்சி அவ்வப்போது நடப்பதுண்டு, அவ்வகையில் நேற்று(07.08.2025) அன்று அந்த தண்டம் வழக்கம்போல் எந்த பிடிமானமும் இல்லாமல் நின்றது.
பிரதோஷ நாளன அன்றையதினம் திருமுறை ஓதும்போது இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதோஷ வழிபாடுகள் முடியும் வரை தொடர்ந்தது (சுமார் 4 மணி நேரம்) , பின் நடை சாற்றும் நேரம் அது சரிய,அப்படியே பேழைக்குள் வைக்கபட்டது.
சிவன் அங்கு எக்காலமும் அந்த தண்டத்தை பிடித்து நின்று அருள்பாலிப்பதும் உண்டு எனும் அதிசயத்தை பல்வேறு பக்தர்கள் நேரில் கண்டனர்.
இந்துக்களின் ஆலயமெல்லாம் சக்திவாய்ந்தவை, அங்கிருக்கும் தெய்வங்களும் நித்தியமானவை, எக்காலமும் அங்கு அரசாட்சி செலுத்துபவை என்பதை அந்த தண்டம் நின்று சொல்லிற்று.