logo
home பலன்கள் ஜனவரி 24, 2016
ஒவ்வொரு ராசிக்கும் நன்மை தரும் சந்திரனின் அருமை பெருமைகள்
article image

நிறம்

சந்திரன் பூமிக்கான இயற்கை துணைக்கோள். பூமி சூரியனை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றுவதை போல சந்திரன் பூமியை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றுகிறது. பூமியிலிருந்து 3,84,403 கி,மீ, தூரத்தில் உள்ளது. பூமிக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் கூட, இது பூமியை சுற்றி வர 29.32 நாட்கள் ஆகும்.சந்திரனின் முக்கிய அம்சம் அதன் ஈர்ப்பு தன்மை. ஆம், பூமியின் ஈர்ப்பு தன்மையை விட சந்திரனின் ஈர்ப்பு தன்மை 6 மடங்கு குறைவு. சந்திரனில் நீர், பாலைவனம்,மலைகள் இருக்கு இல்லை என்ற ஆராய்ச்சியில் வானவியலாளர்கள் இன்றும் வாதிட்டும் அறிந்தும் கொண்டு தானிருக்கிறார்கள். நம் இந்திய ஜோதிடத்தில் சந்திரன் தான் மிக முக்கியமானதாக கருதபடுகிறது ஒரு குழந்தை பிறப்பின்போது சந்திரன் எந்த ராசியில் நிற்கிறதோ அந்த ராசியை அக்குழந்தையின் ஜனன ராசி என்று கூறுவர். பல யோகங்கள் சந்திரனை முன் வைத்தே கணக்கிடப்பட்டுள்ளன. மிக முக்கியமான யோகங்களின் ராஜாவான கஜ கேசரி யோகம் சந்திரனை முன் வைத்தே கணக்கிட படுகிறது. சந்திர ராசியை வைத்துதான் பிறக்கும் குழந்தையின் குணநலன்களை அறிகிறார்கள். சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், திருவோணம். சந்திரனை இந்திய ஜோதிடத்தில் மனதிற்கான கிரகம் என்று கூறுகின்றனர். சந்திரன் ராசி கட்டத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அதை வைத்துத்தான் ஒரு மனிதனின் அந்த நாளுடைய பலன்களை கூற முடியும். சந்திரன் ஆட்சி ராசி கடகம், இவர் ரிஷபத்தில் உச்சமும் விருச்சிக ராசியில் நீசமும் பெறுகிறார்.சந்திரனை வைத்துதான் திதி,நட்சத்திரம்,அமாவாசை,பௌர்ணமி போன்றவை தீர்மாணிக்கபடுகிறது.மேற்கூறிய நான்கின் நிலைகள்தான் பூமியில் ஜீவராசிகளை ஆட்கொண்டு வழி நடத்துகிறது. நம் மூளையில் உள்ள செரிபலத்தில் ventircle 1,vemtricle 2, இன் இயக்கமும்,நம்முடையbllod plasma.,வின் இயக்கத்தையும் வைத்துகொண்டு ventircle 3., வழியாக midula vai. இயக்குகிறது. இந்த 4 இன் ஒரு முக்கிய பகுதியான மனத்தை இயக்குகிறது blood plasama,வை இயக்குவதால் இரத்தத்தின் ஓட்டத்தையும் அதன் விரைவு செயல் பாட்டையும் இயக்குவதால் மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளித்து மூளையை திறம்பட செயல்பட வைப்பதால் மூளையின் இயக்கமும் pitutary இயக்கமும் சீராக இருந்து நம்முடைய மனம் தெளிவான செயல்ப்பாட்டை செய்து எண்ணங்கள் தெளிவாகி அதன் செயல் திறம்பட உடலின் வழியாக செய்யப்படுகிறது. உடலின் செல்களின் இயக்கத்திற்கு மூலமாக இருப்பதால் சந்திரனை வைத்து அம்மனிதனின் மூலமான DNA வான அவனின் தாயின் உடைய பங்கை கூட கணிக்க முடியும். கேது,ராகு,குரு,புதன், போன்ற வற்றின் பகுதி செயல்பாடாகவும் சந்திரன் இருப்பதால் சந்திரன் இரத்த இயக்கமும்,குருவின் மூளை செயல்படும் திறமாக இருப்பின் அம்மனிதன் திறமைசாலியாக இருப்பான். அனைத்து வெற்றிகளிலும் எல்லா கலைகளிலும் பெறுவான் அல்லவா, இரத்த இயக்கத்தை எந்த சக்தியுடன் சேர்த்தாலும் ஒரு பெரிய சக்தியாக வெளிவரும் என்பதால் தான் சந்திரனை எல்லா யோகங் களுக்கும் முக்கியமாக கூறினார்கள். சந்திரன் வலுவாக இருக்கிற ரிஷப, கடகம்,ராசிக்காரர்கள் மனதளவில் பலமுள்ளவர்களாகவும் எந்த சூழ்நிலையிலும் பதட்ட படாதவர்காளகவும் இருப்பர். சந்திரனுடைய நட்சத்திரமான ரோகினி,அஸ்தம்,திருவோணம் நட்சத்திர காரர்கள் பிறர் மனம் அறிந்து பேசுவதில் வல்லவர்கள் , பிறரை தன் தெளிவான பேச்சினால் கவர கூடியவர்களாக இருப்பார்கள். சந்திரனுடைய பயணம் 21/2 நாட்கள் ஒரு ராசியில். தினமும் நாம் நடந்து கொள்ளும் விதம் மாறுபடுவதற்கு சந்திரனின் சுழற்சியே காரணம்.