திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை நாதர் திருக்கோவிலில் உள்ள சிவபெருமான், மகாவிஷ்ணுவிற்கு சக்ராயுதத்தை தந்து அருள்புரிந்துள்ளார். சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் மகாவிஷ்ணு ஒரு சமயம் தனது சக்ராயுததை இழந்து விட்டார், அந்த சக்ராயுதத்தை பெறுவதற்கு சிவபெருமானை பூஜிக்கத் துவங்கினார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு சிவபெருமானை வழிபட தொடங்கினார். இப்படி அவர் வழிபடும் போது மகாவிஷ்ணுவின் பக்தியை பரிசோதிக்க எண்ணினார் சிவபெருமான். மகாவிஷ்ணு ஆயிரம் தாமரை மலர்களைகொண்டு வழிபடும்போது ஒரு தாமரையை மறையச் செய்தார். பூஜை செய்யும்போது ஆயிரமாவது மலர் இல்லாத தால் மகாவிஷ்ணு தன் கண்களின் ஒன்றை தோண்டி எடுத்து பூஜிக்க முற்பட்டபோது மகாவிஷ்ணுவிற்கு சிவபெருமான் காட்சி தந்து, இழந்த சக்ராயுதத்தை தந்தருளினார். வீழிச்செடிகள் நிறைந்த இத்தலத்தில் சிவபெருமான் எழுந்தருளியதால் `வீழிமிழலை நாதர்’ என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார்.
நிறம்