logo
home ஆன்மீகம் நவம்பர் 03, 2018
திருமண தோஷம் என்பது உண்மையா? தோஷத்தால் விளையும் செயல்கள் என்ன?
article image

நிறம்

ஜோதிடத்தில் திருமண தோஷத்தை மூன்று வகையாகப் பிரித்து பார்க்க வேண்டும். திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவது போல முதலில் நிற்பது ஜாதகம் தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. முதலில் ஜாதகத்தில் குடும்பம் ஸ்தானம் இரண்டாம் இடம் , புத்திர பாக்யம் , பூர்வ புண்ணியங்கள் ஸ்தானம் ஐந்தாம் இடம் , களத்திர ஸ்தானம் ஏழாம் இடம். இந்த பாவங்கள் தான். இந்த பாவங்கள் 6,8, 12, பாவங்களில் இருந்தால் ஒரு விதமான தோஷம் , இல்லை அவர்கள் சாய கிரங்களுடன் சேர்ந்து இருதாலும் ஒரு வித மான தோஷம். 6,8, 12, பாவத்திற்க்கு உண்டான கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ அது ஒரு விதமான தோஷம் அதிலே உங்களுக்கு என்ன தோஷம் உள்ளது என்று நல்ல இறை ஆசி பெற்ற ஜோதிடரை நீங்கள் கண்டு அறிந்த பின்பு அவர்களிடம் தக்க ஆலோசனை செய்து அதற்க்கு உண்டான நல்ல திர்வுகளை கேட்டு அதன் படி நடந்தால் நல்லதொரு மாற்றத்தினை கொண்டு வாழ்வில் 16 செல்வங்களும் பெற்று வாழ் வாங்கு வாழலாம். 1 : ஒரு மனிதன் பிறந்த போதே அவர்களுடன் ஜாதகத்தை அப்பொழுதே சரி செய்தால் நூறு சதவீதம் மாற்றி அமைத்து கொள்ளலாம். 2: வளர்ந்து பின்பு 14 வயது உள்ள போது சரி செய்தால் 90 சதவீதம் அவைகளை மாற்றி சரி செய்து கொள்ளலாம். இந்த இரண்டு தோஷங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு உங்களுடைய தாய், தந்தை, துனை வேண்டும். அதற்க்கு பின்னால் உங்கள் வாழ்க்கையை சரி செய்து கொள்ள யார் துனையும் தேவை இல்லை. சுயமாக சிந்திக்கும் திறமைகள் உங்களிடம் வந்தவுடன் ஆனவம் மற்றும் வர கூடாது.அனவம் கொண்ட மனிதனுக்கு ஆபத்துகளை வருவதை ஆண்டவனால் கூட அரிய முடியாதாம். ஆனால் நல்ல குரு வேண்டும்.நல்ல குரு அருள் இருந்தால் சகலமும் எளிதாக கிடைத்துவிடும். அதனால் தான் மாதா ,பிதா , குரு , தெய்வம் என்றார்கள் அதனால் தான் குரு பார்த்தால் உங்களுக்கு கோடி புன்னியம் கிடைத்து விடும் என்பார்கள். 3:அப்படியும் சரி செய்ய வில்லை என்றால் திருமணத்திற்க்கு முன்பாவது சரி செய்து கொள்ள வேண்டும். இந்த மூன்று வாய்ப்புகளையு தவற விட்டவர்கள் குழந்தை பிறப்பிற்க்கு முன்பாவது சரி செய்து கொள்ள வேண்டும்.இதையும் சரிசெய்ய வில்லை என்றால் அடுத்த தலை முறைகள் வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டும். உங்களுக்கு நல்ல நேரத்தில் குழந்தைகள் பிறந்தால் போதும் உங்கள் ஜாதகத்தினை அத்துனையுமே மாற்றி நல்லதாகவே அமைத்துவிடும். எம் ஜி ஆர் பாடலில் ஒரு வரி வரும் எந்த குழந்தையும் நல்ல குழந்தையே மன்னில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையில் வளர்ப்பினிலே என்று வரும் பாடல் வரியிலே. எந்த தாயவாது தீய குழந்தைகளாக பிறக்க வேண்டும் என்று என்னுவார்களா இதை நன்றாக என்னி பார்த்தாலே உங்களுக்கு உன்மை புரிந்துவிடும்.அதற்க்கு காரணம் உங்களுடைய சஞ்சித கர்மாவே (அதாவது முன் ஜெனம் பாவங்களே) அதை இப்போதே அளிப்பதற்க்கு என்ன வழி என்று சிந்தியுங்கள். 1: அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை. 2: திருமணம் ஆன பின்பு கணவன் , மனைவி, ஒற்றுமையுடன் வாழாமல் இருப்பது.ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான். 3 : திருமணம் ஆன பின்பு புத்திரர்கள் பிறக்காமல் இருப்பது. அப்படியே பிறந்தாலும் நல்ல ஜாதகம் அமையாமல் பிறப்பது. இந்த மூன்றில் எந்த தோஷம் உங்களுக்கு உள்ளது என்று முதலில் நல்ல ஜோதிடரைய் அனுகி பார்க்க வேண்டும்.திருமணம் தோஷமா அப்படி என்றால் திருமணச்சேரி சென்று வந்தாலே போதுமே என்று பலரும் சொல்வார்கள் எல்லா திருமணம் தோஷத்திற்க்கு அது பரிகாரம் கிடையாது. அதற்க்கு நிவாரனமாக யந்திரங்கள் , மந்திரங்களோ, இல்லை தோஷம் களிக்க பரிகாரம் என்ற பெயரில் உங்களை வழி நடத்தினால் அந்த வழிகள் அனைத்துமே பொய்யானவையே. நம் சித்த புருஷர்களும் , மகான்களும் ,தவ யோகிகளும் ,இறைவழிபாடு மூலம் எப்படி எல்லா தோஷங்களையும் களைக்க எளிய முறையில் வழியினை வகுத்து உள்ளனர் அவைகளை நல்ல ஜோதிடரை அனுகி உங்களுடைய சுய ஜாதகத்தை கான்பித்து எளிய முறை பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். மு.கிருஷ்ண மோகன் 08526223399, 09843096462